அண்ணா நினைவு இல்லம் சென்ற ஸ்டாலின்.. விருந்தினர் புத்தகத்தில் முதல்வர் எழுதிய வாசகம் என்ன?
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் விருந்தினர் புத்தகத்தில் ஸ்டாலின் எழுதிய குறிப்புகள் வைரலாகி வருகின்றன.
சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பொறுப்பு
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு முதன்முதலாக காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகைப் புரிந்த அவர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி பின்னர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் நினைவை போற்றும் புகைப்படங்களை கண்டு மகிழ்ந்தார்.

பங்கேற்பு
இந்நிகழ்வில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி எழிலரசன், சுந்தர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

என்ன குறிப்பிட்டார்?
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த விருந்தினர் புத்தகத்தில் "மக்களிடம் செல் அவர்களுடன் வாழ் அவர்களிடமிருந்து கற்றுக் கொள், அவர்களை நேசி. அவர்களுக்கு சேவை செய் (இது பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரை). அவர் வகுத்து தந்த பாதையில் கழக ஆட்சி பீடு நடைபோடும் என்பதை உறுதி ஏற்கிறேன், நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

பாசம்
பேரறிஞர் அண்ணாவின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் கருணாநிதி. இவரும் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்தினார். தந்தையை போல் ஸ்டாலினும் அண்ணா வழியில் ஆட்சியை நடத்த பாடுபடுவோம் என கூறியுள்ளார். இந்த வாசகங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications