இரு குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை.. ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி.. காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மாம்பாக்கம் பகுதியில் இரண்டரை வயது குழந்தை, ஐந்து மாத கைக்குழந்தை உள்ள பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்பட்ட மாம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருகிறார் சந்தோஷ்குமார் . இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருவள்ளூர் மணவாளன் நகரை சேர்ந்த ரங்கநாதனின் மகள் ஹேமாவதி (24) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை

இவர்களுக்கு இரண்டரை வயது ஆண் குழந்தையும், 5 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஹேமாவதி படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலையில் ஈடுபட்டுள்ளார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு ஹேமாவதியின் கணவன் சந்தோஷ் குமார் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது ஹேமாவதி தூக்கில் தொங்கியுள்ளார்.

சிகிச்சை அளிக்க மறுப்பு

சிகிச்சை அளிக்க மறுப்பு

உடனே அக்கம்பக்கத்தினரை அழைத்து ஹேமாவதியை கீழே இறக்கி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதால் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ஹேமாவதியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என கூறினர்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

உடனே ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து பின்னர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து முதல்கட்ட விசாரணையில் சந்தோஷ்குமார் லாரியில் தண்ணீர் வினியோகிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.

சம்பளம்

சம்பளம்

இவரிடம் லாரி ஓட்டுனராக பணிபுரியும் ஓட்டுனருக்கு சம்பளம் தராததால் லாரி ஓட்டுனரின் தாயார் ஹேமாவதியிடம் சென்று தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹேமாவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. மேலும் திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆனதால் இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+