குமரி முழுக்க கஞ்சா சப்ளை.. “சிக்கிய பெண் எஸ்.ஐ கணவர்” மும்பையில் சொகுசு வாழ்க்கை- விசாரணையில் பகீர்
கன்னியாகுமரி: மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட நாலரை கிலோ கஞ்சாவை குமரி மாவட்ட போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கஞ்சா கடத்திய மும்பை பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொகுசு கார், பைக், ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தனது மனைவியான சப்-இன்ஸ்பெக்டரின் துணையுடன் கஞ்சா விற்பவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு கஞ்சா சப்ளை செய்து வந்ததாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கஞ்சா சப்ளை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளையில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தவும் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து தனிப்படை போலீசார் இன்று தக்கலை, அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கன்னியாகுமரி
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்றை போலீசாஅர் மடக்கி விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய நிலையில் காரை சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்ட போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பெண் சப்-இன்ஸ்பெக்டர்
விசாரணையில் காரில் கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வின் மற்றும் மனோஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது
பளு தூக்கும் வீரரான செல்வின் கடந்த சில வருடங்களுங்களுக்கு முன் மும்பை சென்று அங்குள்ள ஜிம் ஒன்றில் டிரைனராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு வரும் மும்பையைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார்.

மும்பையில் சொகுசு வாழ்க்கை
இந்த நிலையில் மனைவியின் மூலம் அங்குள்ள கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் சப்-இன்ஸ்பெக்டரான மனைவியின் துணையுடன் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த மற்றொரு ஜிம் டிரைனரான தனது நண்பன் மனோஜ் உடன் சேர்ந்து மும்பையில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கொள்முதல் செய்து காரில் கடத்தி வந்து வரும்போதே கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு சப்ளை செய்வதும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் போர்வையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

கஞ்சா பறிமுதல்
ற்போது விற்பனைக்காக மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சாவை கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்துவிட்டு நான்கரை கிலோ கஞ்சாவை குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாகவும் அப்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து நான்கரை கிலோ கஞ்சா 36-ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததோடு அவர்களை தக்கலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications