"லைலா ஆண்ட்டி".. ஜன்னலில் பல்லி போல ஒட்டிக்கொண்டு.. பகீர் இளைஞர்.. "விநோத சைக்கோ"வால் மிரண்ட போலீஸ்
வினோத சைக்கோ இளைஞர் கொலை சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்டார்
கன்னியாகுமரி: 28 வயது சைக்கோ இளைஞர் ஒருவர் கைதாகி உள்ளார்.. தன்னுடைய விநோத மற்றும் விபரீத செயல்பாடுகள் காரணமாக, கைதாகி இப்போது ஜெயிலிலும் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.. என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ளது மூவாற்று முகம் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் எட்வின்.. 28 வயதாகிறது.. இவர் ஒரு டிப்ளமோ என்ஜினீயர்.
இவரது அப்பா இறந்துவிட்டார்.. அம்மாவுடன் எட்வின் தற்போது வசித்து வருகிறார்... இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கமலதாஸ்... அவர் மனைவி பெயர் லைலா.. 47 வயதாகிறது.
இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.. மகள்களுக்கு கல்யாணமும் ஆகிவிட்டது.. மகன், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்... இதனால் வீட்டில் கமலதாசும், லைலாவும் மட்டுமே வீட்டில் இருந்து வந்தனர்.

விசித்திர சைக்கோ
கடந்த சில நாட்களுக்கு முன்பு லைலாவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.. இதனால் வீட்டிலேயே சுயநினைவின்றி மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர், பதறிப்போய், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லைலாவை உடனடியாக மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.. அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டது.. ஆனாலும், பலனின்றி நேற்று லைலா பரிதாபமாக இறந்துவிட்டார்.. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அழகு ஆண்ட்டி
அப்போதுதான், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணையை மேற்கொண்டனர். சம்பவத்தன்று லைலா வீட்டிற்குள் விழுந்து கிடந்ததால், அன்றைய தினம் என்ன நடந்தது என்று அவர்களிடம் கேட்டறிந்தனர்.. அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த எட்வினிடமும் விசாரித்தனர்.. ஆனால், எட்வின் போலீசார் எது கேட்டாலும் அதற்கு முன்னுக்கு பின் முரணாகவே பதில் சொல்லி கொண்டிருந்தார்.. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், தங்களது கிடுக்குப்பிடி விசாரணையை துவங்கினர்.. அப்போதுதான் மொத்த உண்மையையும் எட்வின் சொல்ல தொடங்கினார்.

விநோத சைக்கோ
எட்வின் ஒரு மனநோயாளியாம்.. பெண்கள் யாராவது அழகாக இருந்தால், முறைத்து பார்த்து கொண்டே இருப்பாராம்.. அப்படித்தான் லைலாவை பார்த்து வந்துள்ளார்.. லைலாவின் கணவர் வீட்டை விட்டு எப்போது வெளியே கிளம்புவார் என்று நோட்டம் பார்த்து கொண்டே இருப்பாராம்.. அவர் கிளம்பி சென்றதுமே, லைலா வீட்டு படுக்கை அறையை வந்து எட்டிப்பார்ப்பாராம்.. அப்போது லைலா தூங்கும் அழகை ரசிப்பதையே வழக்கமாகவும் கொண்டிருந்துள்ளர்.. சம்பவத்தன்று, உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு லைலா சென்றுவிட்டு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.. வீட்டில் தனியாகத்தான் இருந்துள்ளார்...

இரும்பு கம்பிகள்
அப்போது, திடீரென எட்வின் வீட்டிற்குள் நுழைந்துவிட்டான்.. லைலாவின் அழகில் மயங்கி, பலாத்காரமும் செய்ய முயன்றுள்ளார்.. இதில் லைலா அலறி கூச்சலிட்டதால், பயந்துபோன எட்வின், அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து, லைலாவின் தலையில் ஓங்கி தாக்க உள்ளார்.. இதில் லைலா ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்து மயங்கி உள்ளார். அப்போது, அவரை பாலியல் பலாத்காரம் செய்து எட்வின் தப்பிவிட்டார்.. இவ்வளவையும் போலீசாரிடம் வாக்குமூலமாக சொன்னதையடுத்து, எட்வினை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

ஜன்னல் கம்பி
எட்வின் நன்றாக படித்திருக்கிறார்.. டிப்ளமோ என்ஜினியர் என்பதால், பக்ரைன், கத்தார், மஸ்கட் போன்ற அரபு நாடுகளில் வேலையும் பார்த்து வந்துள்ளார்.. ஆனால், சின்ன வயதில் இருந்தே பெண்கள் மீது அதீத ஈர்ப்பு இவருக்கு இருந்து வந்துள்ளது... அதிலும், தனியாக வீடுகளில் படுத்து தூங்கும் பெண்களை பார்த்து ரசிப்பது, எட்வினின் ஆல்டைம் பழக்கமாகவும் இருந்து வந்ள்ளது.. இந்த லைலா என்பவர், எட்வினுக்கு உறவுக்கார பெண்தானாம்.. ஆண்ட்டி முறை, அதாவது 47 வயது பெண்ணான லைலா, எட்வினுக்கு மாமி முறை உறவு என்கிறார்கள்.. பல நாட்களாகவே ஜன்னல் வழியாக லைலாவை பார்த்து ரசித்து வந்த நிலையில், ஒருமுறை இப்படித்தான் லைலா தூங்கும்போது, எட்வின் மெய்மறந்து ரசித்து கொண்டிருந்திருக்கிறார்..

லைலா அலறல்
திடீரென கண்விழித்த லைலா, எட்வினை பார்த்து அலறிவிட்டார்.. ஜன்னலில் பல்லி போல ஒட்டிக்கொண்டு, லைலாவையே முறைத்து முறைத்து பார்த்திருக்கிறார்.. இதனால் லைலா கத்தி கூச்சலிட்டதுடன், எட்வினின் அம்மா ரோஸ்லினிடமும் அவனது சைக்கோ சேட்டை பற்றி புகாரும் செய்துள்ளார்.. லைலா என்றில்லை, அந்த ஊரில் உள்ள மற்ற பெண்களிடமும் இப்படி வினோதமாகவே எட்வின் பலமுறை நடந்து கொண்டதால், வீட்டிற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.. எட்வினின் வினோத செயலால், அவரது அம்மாவுக்கு வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு அவமானமும் இருந்து வந்துள்ளது..

கட்டில் சட்டம்
சம்பவத்தன்று உறவினர் வீட்டு கிரகப்பிரவேசமாம்.. அந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பியிருந்தார் லைலா.. வெயிலில் சென்றுவந்த களைப்பில், தன்னுடைய வீட்டில் மரக்கட்டிலில் படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.. அப்போதுதான் எட்வின் திடீரென உள்ளே நுழைந்துவிட்டார்.. லைலா கூச்சலிட்டு சத்தமிடவும், அவரது தலைமுடியை பிடித்து, கட்டில் சட்டத்தில் வைத்தே பலமுறை இடித்துள்ளார்.. இப்படி இடித்து இடித்தே, தலையில் ரத்தம் கொட்டி சுயநினைவு இழக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளார் எட்வின்.. மயங்கி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையிலும் சைக்கோ எட்வின், லைலாவை பலாத்காரம் செய்து தப்பிஉள்ளார்.

லைலா உயிர்
லைலாவை பலாத்காரம் செய்யும் நோக்கில் அன்றைய தினம் வீட்டுக்குள் செல்லவில்லையாம்.. பெண்களை ரசித்து பார்க்கும் பழக்கத்தை , தன்னுடைய வீட்டில் போட்டு கொடுத்த ஆத்திரத்தில்தான் உள்ளே நுழைந்து தாக்கியதாகவும், லைலா மீதான அதீத ஆசையால் பலாத்காரம் செய்ய நேரிட்டுவிட்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.. இந்த விநோத செயல்கள் போலீசாருக்கு ஆச்சரியத்தை தந்த நிலையில், அவர் தற்போது கைதாகி உள்ளார்.. ஆனால், கடைசிவரை மயக்க நிலையிலேயே லைலாவின் உயிர் பிரிந்தே விட்டது..!!!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications