Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்சியில் விறுவிறு வளர்ச்சி! சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்த திமுக மேயர்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தனது சொந்த செலவில் சபரிமலை தேவசம் போர்டுக்கு புது டிராக்டர் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதை பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளவர் நாகர்கோவில் மேயர் மகேஷ் என்பது குறிபிடத்தக்கது.

மேயர் பதவியை தொடர்ந்து கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவியும் தன் வசம் வந்துள்ளதால் அதற்கு நன்றிக்கடனாக தாம் வணங்கும் ஐயப்பன் கோவிலுக்கு டிராக்டரை பரிசளித்திருக்கிறார் மகேஷ்.

நாகர்கோவில் மேயர்

நாகர்கோவில் மேயர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருப்பவர் மகேஷ். வழக்கறிஞராக பணியை தொடங்கி குமரி மாவட்ட திமுகவில் படிப்படியாக வளர்ந்து வந்தவர். நாகர்கோவில் நகரச் செயலாளராக இருந்த இவர், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மீதான தலைமையின் கடும் கோபத்தால் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரானார். கடவுள் பக்திமிக்கவரான மகேஷ் சபரிமலை, திருப்பதி, என ஆன்மிகத் தலங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்றுவிடுவார்.

கட்சியில் வளர்ச்சி

கட்சியில் வளர்ச்சி

கடந்த ஓராண்டில் மேயர், மாவட்டச் செயலாளர், என கட்சியில் விறுவிறு வளர்ச்சி கண்ட மகேஷ், ஆண்டுதோறும் தாம் செல்லும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புது டிராக்டர் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கடந்த வாரம் இதற்கான சாவியை சபரிமலை தேவசம் போர்டு நிர்வாகிகளிடம் முறைப்படி ஒப்படைத்திருக்கிறார். பம்பையிலிருந்து பொருட்களை ஏற்றி வருவதற்கும் செல்வதற்கும் அங்கு டிராக்டர் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கோவில்களுக்கு விசிட்

கோவில்களுக்கு விசிட்

அதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கும் அடிக்கடி விசிட் அடித்து விடுவார் நாகர்கோவில் மேயர் மகேஷ். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு ஓரளவு சொல்லிக்கொள்ளும் படி கட்டமைப்புகள் உள்ள நிலையில் அவர்களை எதிர்கொள்ள அவர்கள் வழியிலேயே சென்று அரசியல் செய்து வருகிறார் மகேஷ். இதனிடையே திமுக இளைஞரணியில் மாவட்ட அளவிலான பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களையே கொண்டு வர வேண்டும் என்பதில் அவர் குறியாக உள்ளார்.

 மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், குமரி மேற்கு மாவட்டச் செயலாளருமான மனோ தங்கராஜுடன் இணைந்து திமுகவில் உட்கட்சி ரீதியாக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து குமரி கிழக்கு மாவட்டத்தில் மகேஷ் அரசியல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+