நள்ளிரவில் என்னுடைய மனைவியுடன்.. அந்த கோலத்தில் முன்னாள் எம்எல்ஏ முருகேசன்.. கணவர் பரபரப்பு புகார்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வீட்டில் இருந்த பெண்ணுடன் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உல்லாசமாக இருந்ததை அந்த பெண்ணின் கணவர் பார்த்துவிட்டதால் அவரை சரமாரியாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார். கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி விஜயஸ்ரீ மற்றும் இரண்டு மகள்களுடன் அதே வீட்டில் வசித்து வருகிறார்.

கூலி வேலைக்கு சென்ற குமார் கடந்த 11-ம் தேதி இரவு வேலை முடித்து வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் வீட்டின் முன் கார் ஒன்று நின்றுள்ளது. மேலும் அவர் வீட்டு கதவும் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

மனைவி

மனைவி

குமார் பல முறை கதவை தட்டிய போதும் மனைவி விஜயஸ்ரீ திறக்காத நிலையில் என்னாச்சோ ஏதாச்சோ என அஞ்சி அறையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பார்த்துள்ளார். அப்போது முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் குமாரின் மனைவி விஜயஸ்ரீ யும் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ

முன்னாள் அதிமுக எம்எல்ஏ

இந்நிலையில் வீட்டு கதவை திறந்து வேகமாக வந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தகாத வார்த்தைகள் பேசியதோடு தனது கார் டிரைவர் மகேஷ் என்பவருடன் சேர்ந்து குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

 நாஞ்சில் முருகேசன்

நாஞ்சில் முருகேசன்

காயமடைந்த குமார் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதில் நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது மனைவி விஜயஸ்ரீக்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கும் பல வருடங்களாக தவறான உறவு இருந்து வந்தது.

கணவர் வாக்குமூலம்

கணவர் வாக்குமூலம்

நான் வேலை விஷயமாக நாகர்கோவில் செல்லும் போது முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் எனது வீட்டிற்கு வந்து என் மனைவியுடன் தனிமையில் இருந்து விட்டு செல்வார். அப்படி கடந்த 11 ஆம் தேதி அவர் என் மனைவியுடன் தனிமையுடன் இருந்த நிலையில் நான் நேரில் பார்த்துவிட்டதால் அவரும் அவரது டிரைவர் மகேஷும் என்னை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என இரணியில் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

நாஞ்சில் முருகேசன மீது புகார்

நாஞ்சில் முருகேசன மீது புகார்

புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3-பிரிவுகளின் கீழ் நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது கார் டிரைவர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர். நாஞ்சில் முருகேசன் ஏற்கெனவே 16-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று பிணையில் வெளிவந்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி

தற்போது அஇஅதிமுக சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக தனது மகளை களமிறக்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் மேலும் ஒரு பாலியல் வழக்கில் அவர் சிக்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+