குமரியில் ரூ.75 லட்சம் செலவில்.. அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்றி வைத்த.. தேசிய கொடி ஒரே நாளில் கிழிந்தது!
கன்னியாகுமரி: நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் மாநிலத்தின் மிகப் பெரிய கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி சேதம் அடைந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் எல்லைப் பகுதிகளிலும் டெல்லியில் மிக உயரமான கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டு இருக்கும்.
பார்ப்பதற்கே மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இதனைக் காணவே பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம்.

கன்னியாகுமரி
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் டெல்லியில் இருப்பது போலவும் மிக உயரமான கொடிக் கம்பம் அமைக்க மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி எம்பி வசந்த குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்தக் கொடி கம்பம் அமைக்கப்பட்டது. கன்னியாகுமரி மகாதானபுரம் நான்கு வழிச்சாலையில் இது அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உயரமானது
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியின் நுழைவாயிலாக விளங்கும் மகாதனபுரம் ரவுண்டானா சந்திப்பில் ரூபாய் 75 லட்சம் செலவில் 147.60 அடி உயரமுள்ள தேசியக் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டிலேயே இது தான் மிக உயரமான கொடிக் கம்பம் ஆகும். தேசியக்கொடி 36 அடி உயரமும் 48 அடியும் கொண்டதாகும். இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி மாவட்டம் பஞ்சலிங்கபுரம் சுற்றுச் சாலையின் நடுவில் உள்ள இதனைத் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஏற்றி வைத்தார். இந்த மிகப் பெரிய கொடி இயந்திரத்தின் உதவி உடன் ஏற்றப்பட்டது. இந்த தேசியக் கொடியைக் காண அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். இரவு நேரங்களிலும் இதனை ரசிக்கும் வகையில் வண்ண விளக்குகளும் இங்கு பொருத்தப்பட்டு இருந்தது.

சேதம் அடைந்தது
ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24*7 பறக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேசியக் கொடியின் கீழ்ப் பகுதி அங்கு வீசிவரும் காற்று காரணமாகக் கிழிந்து சேதமடைந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மாவட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில் வீசிய சூறைக்காற்று காரணமாகக் கொடி சேதமடைந்து உள்ளது.

ஆய்வு
இதையடுத்து நேற்று மாலை 6 மணி அளவில் திருச்சியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுச் சேதமடைந்த கொடியைப் பத்திரமாகக் கீழே இறக்கப்பட்டது. அப்பகுதியில் எந்தளவுக்குக் காற்று வீசும் என்பதை ஆய்வு செய்து, அதைப் பொறுத்து தற்போது ஏற்றப்பட்ட கொடியின் நீளம்- அகலம் குறைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அடுத்து 15 நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications