தினமும் ராத்திரி லேட்டாக வந்த புது மாப்பிள்ளை.. பொங்கிய புது மனைவி.. கடைசியில் ஒரு தற்கொலை!
கன்னியாகுமரியில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு கொண்டு இறந்துவிட்டார்
கன்னியாகுமரி: கல்யாணம் ஆகி 20 நாள்தான் ஆகிறது.. கணவன் ஒரு பக்கம் தூக்கு போட்டு கொண்டார்.. இதை பார்த்து மனைவி மறுபக்கம் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. இத்தனைக்கும் இது ஒரு லவ் மேரேஜ்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியிலுள்ள ஜீவாநகரை சேர்ந்தவர் விஷ்ணு... இவர் ஷார்ட் பிலிம் எடுக்கும் போட்டோகிராபர்.. இவருக்கு ஷாலினி என்பவர் பழக்கமானார்.. அவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.. இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

ஒருகட்டத்தில் கல்யாணமும் செய்ய முடிவெத்து, தங்கள் வீடுகளில் சொன்னார்கள்.. இருவீட்டிலும் பெற்றோர்கள் சம்மதம் தந்தவுடன் அதன்படியே அனைவரின் ஆசீர்வாதத்துடன் கல்யாணம் நடந்தது.. 20 நாட்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்து முடிந்தது.
அதற்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள்.. என்ன காரணம் என்று தெரியவில்லை. கல்யாணமாகி அடுத்த ஒருசில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது தகராறாகவும் வெடித்துள்ளது.. இதனால் ஆத்திரம் அடைந்த ஷாலினி, கணவன் கண் முன்னாடியே தாலியை கழற்றி வீசிவிட்டதாக தெரிகிறது... இதை பார்த்து அதிர்ந்து போன விஷ்ணுவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது.
அந்த அதிர்ச்சியில் வேகவேகமாக தன்னுடைய ரூமுக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார். பிறகு சந்தேகம் அடைந்த சொந்தக்காரர்கள், கதவை உடைத்து கொண்டு உள்ளே போனபோதுதான், விஷ்ணு தூக்கு போட்டு கொண்டு பிணமாக தொங்கியது தெரிய வந்தது.
கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்த ஷாலினி கிச்சனுக்கு ஓடிப்போய் கத்தியை எடுத்து தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கழுத்து அறுபட்டு ரத்தம் கொட்டியதை பார்த்த உறவினர்கள் பதறிபோய், ஷாலினியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.
ஆனால், விஷ்ணுவுக்கும், ஷாலினிக்கும் எதற்காக சண்டை வந்தது என்று தெரியவில்லை.. விஷ்ணுவின் குடும்பத்தினர், ஷாலினியை விமர்சித்து வந்ததாக தெரிகிறது.. மேலும் விஷ்ணு தினம்தோறும் நைட் நேரத்தில் வீட்டுக்கு லேட்டாக வந்துள்ளார்.. இதுதான் சண்டைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.. இருந்தாலும் கோட்டார் போலீசாரின் விசாரணை நடக்கிறது.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications