கிறிஸ்துமஸ் பண்டிகை.. டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. கன்னியாகுமரி கலெக்டர் அறிவிப்பு
கன்னியாகுமரி : கிறிஸ்துமஸ் பண்டிகையை வரும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக டிச.24ஆம் தேதியும் கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து பிறப்பைக் கிறிஸ்துமஸ் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிச. 25ஆம் தேதி இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக இந்த கிறிஸ்துமஸ் விழா உள்ளது. கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டில் திருவருகை காலத்தினை முடிவு பெறச்செய்து, 12 நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாக இது கருதப்படுகிறது.

இது மட்டுமின்றி, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளித்து, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாகவும் இந்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாகக் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட எந்தவொரு பண்டிகையும் கோலாகலமாகக் கொண்டாடப்படவில்லை. இப்போது தான் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கொண்டாட்டங்கள் சூடு பிடித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்கள் உள்ள போதிலும், ஏற்கனவே, தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. அதேபோல வீடுகளில் அலங்கார விளக்குகள் மற்றும் நட்சத்திரங்களைத் தொங்கவிடப்பட்டு அழகுபடுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்திற்குக் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் தேதியை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications