"கைமாறிய" மனைவி.. கண்ணெதிரே நடந்ததை பார்த்து "இடிஞ்சுப்போய்" நின்ற கணவர்.. கன்னியாகுமரியே ஆடிப்போச்சு
கன்னியாகுமரி: கண்ணெதிரே கைமாறிய மனைவியை கண்டு கலங்கி போய் நின்றார் கணவர்.. இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு. கடைசி நிமிடங்களில் நின்றுபோய்விடுகின்றன.. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

வடமாநிலத்தில் ஒரு கல்யாண பெண், தனக்கு வரப்போகும் மாப்பிள்ளையை இரண்டாம் வாய்ப்பாடு சொல்ல சொன்னார். அந்த மாப்பிள்ளைக்கு வாய்ப்பாடு தெரியாததால், இப்படிப்பட்ட மக்கு கணவன் தனக்கு வேண்டாம் என்று கல்யாணத்தையே நிறுத்திவிட்டார்.
திருமணங்கள்: தனக்கு பிடிக்காத ஸ்வீட்டை வாயில் வலுக்கட்டாயமாக மணமகன் ஊட்டிவிட்டார் என்பதற்காக, மேடையிலேயே பளார் என்று அறைந்தார் ஒரு மணப்பெண்.. அதற்கு பிறகு மாப்பிள்ளையும் அந்த பெண்ணை அறைய, கல்யாணமே நின்றுவிட்டது. இப்படி எத்தனையோ வினோத காரணங்கள் இருந்தாலும், கடைசி நேரத்தில் அந்த கல்யாணங்கள் நின்றுவிடுகின்றன.
ஆனால், நம்ம கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவர் எவ்வளவோ முயற்சி செய்தும், திருமணத்தை நடத்த முடியாமல் போய்விட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த நபர்..
புதுமண பெண்: வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.. கடந்த 2016-ல் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.. ஆனால், கொஞ்ச நாளிலேயே, புதுமண தம்பதிக்கு கருத்து வேறுபாடு வெடித்தது.. தினமும் தகராறும், சண்டையுமாக இவர்களுக்குள் ஓடியது. இதனால் நொந்துபோன அந்த பெண், கணவரிடம் கோபித்து கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டிற்கு போய்விட்டார்.. அதற்கு பிறகு இந்த கணவரும், வெளிநாட்டுக்கு போய்விட்டார்..
இப்படியே நாட்கள் ஓடியது.. அந்த மனைவிக்கு தற்சமயம் 31 வயதாகிறது.. எனவே, 2வது கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.. இதற்காக இன்னொருவருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.. கல்யாணத்துக்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடந்துள்ளன..
டைவர்ஸ்: இந்த விஷயம், வெளிநாட்டிலிருக்கும் கணவருக்கு தெரிந்து, அதிர்ச்சி ஆகிவிட்டார்.. அதெப்படி? டைவர்ஸ் வாங்காமல், இன்னொரு கல்யாணம் செய்ய முடியும்? இது சட்டவிரோதமாயிற்றே? என்று அதிர்ந்து போய், கொல்லங்கோடு போலீசுக்கு ஓடினார்..
என்னடைய மனைவி, என்னிடம் விவாகரத்து பெறவில்லை.. சட்டவிரோதமாக இன்னொருவரை திருமணம் செய்ய உள்ளார். அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீசில் புகார் செய்தார். இதனால் போலீசாரும், அந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக மும்முரமானார்கள்.
கைவிரித்த போலீஸ்: ஆனால், அதற்குள் அந்த பெண்ணுக்கு 2வது கல்யாணம் நடந்து முடிந்துவிட்டது.. புதுத்தாலி, புதுபுடவை, புது கணவருடன், அதே போலீஸ் ஸ்டேஷன் வழியாக, காரில் சர்ரென பறந்து போனார்.. இதை பார்த்த போலீசார், இனி தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டனர்.. வேண்டுமானால், மகளிர் போலீசுக்கு சென்று புகார் கொடுங்கள் என்று அறிவுறுத்தி கணவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள்..
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது, தன்னுடைய வீட்டில் மனைவி இல்லையாம்.. அதனால், மாமியார் வீட்டுக்கு தேடி சென்றுள்ளார்.. அங்கிருந்த மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறும் கணவர் அழைத்துள்ளார்.
அதற்கு அவர், "உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை" என்று சொல்லி உறவினர்களை வைத்து மிரட்டி அனுப்பியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, 2வது கல்யாணத்துக்கு, மனைவி தயாரானதாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகுதான், மனமுடைந்துபோன, கணவர், போலீசில் தஞ்சம் அடைந்து, உதவி கேட்டாராம். எனினும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
பரிதாப கணவர்: மனைவிக்கு கல்யாணம் என்ற விஷயத்தை கேள்விப்பட்டு, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் ஓடிவந்தும், கல்யாணத்தை நிறுத்த முடியாமல்போய் விட்டதே என்று நொந்து போய் உள்ளாராம் அந்த கணவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications