Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏய் ஏய், தூங்க முடியலடீ உன்னால"..உருகிய குமரி பாதிரியார்..ஒதுங்கி போனாலும் விடல:போலீசுக்கு போன பெண்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பாதிரியார் மீது இன்னொரு புகார் கிளம்பி உள்ளது.. மற்றொரு இளம்பெண் போலீசுக்கு போயுள்ளார்.. நாளுக்கு நாள் பாதிரியார் மீது குவியும் புகார்களை கேள்விப்பட்டு, குமரி போலீசார் மலைத்து போய் உள்ளனராம்..!!

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ... 29 வயதாகிறது.. நன்றாக படித்தவர்.. சென்னையில் தத்துவயியல், எம்பிஏ., எம்ஏ ஆங்கிலம் படித்திருக்கிறார்

Kanniyakumari Pastor and another case against Priest benedict andro by young woman

இதைதவிர, இறையியல் தொடர்பான படிப்புகளை கிட்டத்தட்ட 7 வருடங்கள் படித்துள்ளார்.. ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.

ஆபாச சேட்டிங்: பாதிரியாராக பணியாற்றுவதற்கு முன்பிருந்தே, பெண்களிடம் நெருங்கி பழகி வந்திருக்கிறார். அந்தவகையில், சென்னையில் படிக்கும்போது ஒரு பெண்ணை 4 வருடங்களாக காதலித்துள்ளார்... அதே பெண்ணுக்கு கல்யாணமும் செய்து வைத்துள்ளார்... ஆனால், கல்யாணத்துக்கு பின்னரும் அந்த பெண்ணுடன் பெனடிக்ட் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார்... இவர்கள் இருவரும் அரை நிர்வாணத்தில் பேசிக்கொண்ட வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட்டுகள் முதன்முதலில் இணையத்தில் வெளியாகியபோதுதான், பெனடிக்கின் லீலைகள் ஒவ்வொன்றாக வெளியே தெரிய ஆரம்பித்தது..

குட் மார்னிங், குட்நைட்: கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள், அவர்கள் வீட்டு பெண்கள் என 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. எப்போதுமே சர்ச்சுக்கு வரும் இளம் பெண்களிடம், அறிமுகம் செய்து கொண்டு, அவர்களுடைய வாட்சப் நம்பர் கேட்டு வாங்கி கொள்வாராம்.. அதற்கு பிறகு, குட் மார்னிங், குட் நைட் மெசேஜ்களை அனுப்ப தொடங்குவாராம்.. அதற்கு யாரிடமிருந்தாவது ரிப்ளை வந்துவிட்டால், உடனே அவர்களிடம் அடுத்தகட்ட பேச்சை ஆரம்பித்து, விஷயத்துக்கு வருவாராம்.. 'நான் சர்ச்சில் மட்டும்தான் பாதிரியார்.. மற்றபடி எல்லாரையும் போல நான் சராசரி மனிதன்" என்று சொல்லி, அந்த பெண்களிடம் உள்ள தயக்கத்தை உடைத்துவிடுவாராம்.

 Kanniyakumari Pastor and another case against Priest benedict andro by young woman

தூங்க முடியலடீ: பிறகு, "நீ அழகாய் இருக்கே, உன் டிரஸ் நல்லா இருந்தது, உன்னால என் தூக்கமே போச்சு" என்று அடுத்தக்கட்ட பேச்சை ஆரம்பித்து, இறுதியில் ஆபாச பேச்சில் வந்து முடிப்பாராம்.. அதிலும் ஒரு பெண்ணிடம் வாட்ஸ்அப் மெசேஜில், "என் தூக்கத்தையே கெடுத்து விட்டாய்... உன்னையே நினைத்து கொண்டு இருந்தேன்" என்று ஆரம்பித்து, காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்பி வைத்திருக்கிறார்.. உடனே எதிர்தரப்பில் சாட்டிங் செய்த பெண், "என்கிட்ட மட்டும் தான் இப்படி பேசுவீங்களா?" என்று கேட்க, "யெஸ்.. உன்னிடம் மட்டும் தான்டீ இப்படி பேசுவேன்... பிராமிஸ்டீ.. என்னை நம்பு' என்று பாதிரியார் பதிலளித்துள்ளார்.

காண்ட்ராக்டர் மனைவி: அதிலும், ஒரே வீட்டிற்குள் காண்டிராக்டரின் மனைவி, மகள், மருமகள் என ஒரே வீட்டில் 3 பேருடன் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் உறவு வைத்திருந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. இதையடுத்து பாதிரியார் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார்.. முதல்நாள் அதாவது அவர் கைதானபோதே, 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.. அப்போது உண்மையை சொல்ல மறுத்த பாதிரியார், "பெண்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களே விருப்பப்பட்டுத்தான் அப்படி என்னிடம் நடந்து கொண்டார்கள்" என்றார்.. ஆனால், இதற்கு பிறகு ஒருவாரம் கழித்து, ஒருநாள் விசாரணை அவரிடம் நடத்தப்பட்டது..

அபார்ஷன்: லேப்டாப்பில் இருந்த பெண் யார்? அவருடனான தொடர்பு குறித்து போலீசார் கேட்டுள்ளனர்.. அதற்கு பாதிரியார், அந்த பெண்ணை தீவிரமாக தான் காதலித்து வந்ததாகவும், ஆனால், பாதிரியார் என்பதால் அந்த பெண்ணை தன்னால் கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லை, எனவே 2 பேருமே விருப்பப்பட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் பதிலளித்திருக்கிறார்.. மற்ற பெண்களின் போட்டோக்களை காட்டி, அவர்களை பற்றி போலீசார் கேட்டுள்ளனர்.. அதற்கு பாதிரியார், அந்த ஒரு பெண்ணை மட்டும்தான் காதலித்ததாகவும், மற்றவர்களுடன் நட்பாக மட்டுமே பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.. இதற்கு பிறகு, போலீசார் பாதிரியாரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.. அங்கு தடயங்கள் உள்ளதா? என்பது குறித்து சோதனை செய்தனர். சர்ச்சுக்கும் அழைத்து சென்று, அங்கு விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், வேறு சில தகவல்களும் பாதிரியார் குறித்து கசிந்து வருகிறது. திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபலமான டாக்டர் ஒருவர், பாதிரியார் பணிபுரிந்த சர்ச்சுக்கு அடிக்கடி வந்துபோயுள்ளது தெரியவந்துள்ளது.. இவர் நெய்யாற்றின்கரையை சேர்ந்தவராம்.. ஒருவேளை, பாதிரியாரால் பாதிக்கப்பட்டு கருவுற்ற பெண்களின் கருவை கலைக்க இந்த பெண் டாக்டர் உடந்தையாக இருந்திருப்பார் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது.. ஏற்கனவே பாதிரியார் அளித்த புகார்களையும்தாண்டி, மேலும் 4 பெண்கள் போலீசில் அவர் மீது புகார் தந்துள்ளனர்.. யாராவது பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், தைரியமாக புகார் தர முன்வரலாம் என்றும், புகார் தருவோரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் உறுதி தெரிவித்து வருகின்றனர்..

இந்த நிலையில்தான் இன்னொரு பெண்ணும், பாதிரியார் மீது புகார் தந்துள்ளார்.. இவரும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்தான்.. ஆன்லைன் மூலம் புகாரை தந்துள்ளார்.. அந்த புகாரில், "கடந்த 2022-ம் ஆண்டு பாதிரியாருடன், நான் செல்போன் வாட்ஸ்-அப் மூலம் சாட்டிங் செய்தேன். ஆனால், அவரது நடவடிக்கைகள் பிடிக்கவில்லை.. அதனால், நான் ஒதுங்கிக் கொண்டேன். ஆனாலும் அவர் எனக்கு விடாமல் தொல்லை கொடுத்து வந்தார்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் மீதும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்றோமீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Kanniyakumari Pastor and another case against Priest benedict andro by young woman

இப்போது புகார் தந்துள்ளவர், குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஆவார்.. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்த நிலையில், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. இது தொடர்பாக தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாதிரியார் மீது சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மீதான கைது நடவடிக்கை விரைவில் பாயலாம் என்றும் சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+