நர்ஸை நாசம் செய்து.. அபார்ஷன் செய்த இன்ஸ்பெக்டர்.. மொத்தம் 8 பேர் மீது வழக்கு.. குமரி பரபரப்பு
இளம்பெண் கருக்கலைப்பு விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
கன்னியாகுமரி: குமரியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கரு கலைப்பு செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் கோர்ட் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் அந்த நர்ஸ்.. 31 வயதாகிறது.. திருவனந்தபுரத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தவர்.
இவரை மேக்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றி உள்ளார்.. அத்துடன் பணமோசடியும் செய்திருக்கிறார். இந்த மோசடி குறித்து புகார் தருவதற்காக பளுகல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.

புகார்
அங்கே சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் என்பவர் டியூட்டியில் இருந்துள்ளார்.. புகாரை பெற்று கொண்டு, நர்ஸிடம் நடந்த விவரங்கள் எல்லாம் கேட்டார்.. அப்போதுதான், இளம்பெண் தனியாக வசித்து வருவதை அறிந்து கொண்டார் சுந்தரலிங்கம்.. இதற்கு பிறகு, தான் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து தந்து நர்ஸை குடியமர்த்தினார்.

கர்ப்பம்
பிறகு ஆறுதல் சொல்வது போல அடிக்கடி அந்த வீட்டுக்கு சென்றவர், நாளடைவில் நர்ஸை பலாத்காரமும் செய்துவிட்டதாக தெரிகிறது. இதில் நர்ஸ் கர்ப்பமாகிவிட்டார்.. இதை சுந்தரலிங்கத்திடம் சொல்லி உள்ளார்.. ஆனால், சுந்தரலிங்கமோ அவரை அபார்ஷன் செய்துவிடும்படி சொல்லவும், அதற்கு நர்ஸ் மறுக்கவும், கட்டாயப்படுத்தி குலசேகரம் அருகே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அபார்ஷன் செய்ய வைத்துள்ளார்.

நடவடிக்கை
இதையடுத்து, தனக்கு நடந்த கொடுமை பற்றி, நர்ஸ் பலமுறை போலீசில் புகார் தந்துள்ளார் போலும். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஒருமுறை கலெக்டர் ஆபீசுக்கு வந்து புகார் தந்ததுடன், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்... நர்ஸ் ஜோஸ்பினுக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினரும் இறங்கி போராட்டங்களும் நடத்தினர்.. ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது... ஒருகட்டத்தில் பொறுமை இழந்த நர்ஸ், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு, அப்படியே மயங்கி விழுந்துள்ளார். இதற்கு பிறகு மாதர் சங்கத்தினர்தான் விரைந்து சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றிய சம்பவமும் நடந்தது.

குழித்துறை
இதற்கு பிறகு இந்த வழக்கு கோர்ட்டுக்கு போனது.. பாதிக்கப்பட்ட பெண் குழித்துறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து நீதி கேட்டார்.. அந்த மனுவில், "எனக்கு திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து ஆகி உள்ளது. 9 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவள், ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். நான் நர்சாக பணியாற்றி வருகிறேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, எனது உடமைகளை பறித்து அஜிஸ் என்பவர் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக நான் புகார் அளிப்பதற்காக பளுகல் காவல் நிலையத்துக்கு சென்றேன்.

விசாரணை
அப்போது அங்கு சப் இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரலிங்கம் பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறினார். இளஞ்சிறை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தந்து, விசாரணை என கூறி வீட்டுக்கு வந்து சம்பவத்தன்று என்னை பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் அடைந்தேன். வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கருவை கலைத்தார்... இந்த பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கையும் இல்லை. என்னை பலாத்காரம் செய்த எஸ்.ஐ. மற்றும் அவருக்கு துணை நின்று எனது கருவை சட்ட விரோதமாக கலைத்ததுடன், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கோர்ட்
இந்த புகார் மனுவின் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தியதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு
எஸ்.ஐ. சுந்தரலிங்கம், பளுகல் காவல் நிலையத்தில் ஏட்டாக இருந்த கணேஷ்குமார், தச்சன்விளாகத்தை சேர்ந்த விஜின் 34, அபிஷேக் 25, மூவோட்டுக்கோணம் உமேஷ் 45, தனியார் கிளினிக் டாக்டர் கார்மல் ராணி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தேவராஜ், அனில்குமார் ஆகிய 8 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 323, 354 (ஏ),376, 313 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்... ஆனால், இவ்வளவு குற்றச்சாட்டுக்கும் காரணமான எஸ்ஐ ஆக இருந்த சுந்தரலிங்கம், இப்போது புரமோஷன் பெற்று இன்ஸ்பெக்டராக தேனி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறாராம்..!












Click it and Unblock the Notifications