கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 நாட்கள் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! மாணவர்களே நோட் பண்ணுங்க
குமரி: கன்னியாகுமரி (Kanyakumari) மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் மார்ச் 4 ஆம் தேதி மற்றும் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கும் வரும் மார்ச் 4 ஆம் தேதி அன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அற்விப்பு வெளியிட்டுள்ளனர். இந்த நாட்களில் பொதுத்தேர்வு இருப்பின் அவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசிக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பு தலைமை பதியில் அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அவதார திருநாளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமிதோப்புக்க்கு அய்யா வைகுண்டரை வழிபட செல்வது வழக்கம்.
அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி நெல்லை, தென்காசி மாவட்டங்களிலஉள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு இருந்தால் விடுமுறை கிடையாது
இந்த நாளில் அரசு பொதுத் தேர்வுகள் இருந்தால் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. 4-ம்தேதி உள்ளூர் விடுமுறையன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும்.
இந்த உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்.
கன்னியாகுமரியில் 2 நாட்கள் விடுமுறை
4-ந்தேதி அன்று வேலை நாளாக இருந்து உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் 14-ந்தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்திலும் வரும் மார்ச் 4 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இன்றி கன்னியாகுமரி மண்டக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவை ஒட்டி மார்ச் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளை ஈடு செய்ய மார்ச் 7 மற்றும் 14 ஆம் தேதி சனிக்கிழமைகள் வேலை நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications