கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் அறிமுகமானது சூப்பர் வசதி
கன்னியாகுமரி: பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க, கன்னியாகுமரி கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கிளை தபால் நிலையங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 கிலோ வரையிலான பார்சல்களை கிளை தபால் நிலையங்கள் வழியாக அனுப்ப முடியும். மேலும் 20 கிலோ வரையிலான பார்சல்களை துணை மற்றும் தலைமை தபால் நிலையங்கள் வழியாக அனுப்ப முடியும் என கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
தபால்துறையின் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க, கன்னியாகுமரி கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கிளை தபால் நிலையங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 10 கிலோ வரையிலான பார்சல்களை கிளை தபால் நிலையங்கள் வழியாக அனுப்ப முடியும். மேலும் 20 கிலோ வரையிலான பார்சல்களை துணை மற்றும் தலைமை தபால் நிலையங்கள் வழியாக அனுப்ப முடியும். பார்சல் அனுப்புவதற்கான கட்டணம் 500 கிராம்கள் வரை ரூ.36 மற்றும் ஜி.எஸ்.டி., ஒவ்வொரு கூடுதல் 500 கிராம் அல்லது அதன் பகுதிக்கு ரூ.16 மற்றும் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படும்.
விரைவு பார்சல் (இ.எம்.எஸ்.) சேவை மூலமாக 35 கிலோ வரையிலான பொருட்களை பாதுகாப்பாக மற்றும் விரைவாக எந்த இடத்திற்கும் அனுப்ப முடியும். இந்த சேவையில் சிறப்பு கட்டண சலுகை, கிரெடிட் மற்றும் முன் வைப்பு வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. சிறியது முதல் பெரிய அளவிலான பொருட்களை பேக்கிங் செய்து (அதிகபட்சமாக 35 கிலோ வரை) அனுப்பும் வசதிகள் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்கள், கன்னியாகுமரி, நெய்யூர், குளச்சல், அருமனை, மார்த்தாண்டம், குழித்துறை தபால் நிலையங்களில் உள்ளன.
மேலும் கீழ்க்கண்ட பொருட்களை தபால் துறையின் மேம்படுத்தப்பட்ட பார்சல் சேவைகள் மூலம் சிறப்பு 'பேக்கிங்' செய்து பாதுகாப்பாக அனுப்ப முடியும். குறிப்பாக நூல்தொழில் மற்றும் துணி பொருட்கள் (சேலைகள், உடைகள், பருத்தி துணிகள், தயாரிக்கப்பட்ட ஆடைகள்), மருத்துவ தயாரிப்புகள் (ஆயுர்வேதம் உள்ளிட்டவை), மின்னணு பொருட்கள் மற்றும் கருவிகள் (செல்போன் உபகரணங்கள், சில்லரை மின்னணு பொருட்கள்), கைவினைப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்கள், உணவுப்பொருட்கள் (பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், கைருசி தயாரிப்புகள்) போன்றவற்றை சிறப்பு 'பேக்கிங்' மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அதிக எண்ணிக்கையில் பார்சல்கள் அனுப்ப விரும்பும் வணிக நிறுவனங்கள், ஹோம்மேட் தயாரிப்பாளர்கள், ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் தபால் துறையுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கேற்ற சிறப்பு கட்டண சலுகைகளோடு கூடிய சிறப்பு பார்சல் சேவைகளை ஒப்பந்த முறையில் பெறலாம்.
இந்த சேவையின் மூலம், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், பல்வேறு தொழில் செய்பவர்கள், இதர வாடிக்கையாளர்கள் என அனைவரும் தங்களின் பொருட்களை பாதுகாப்பாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப முடியும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம். வணிகத் தொடர்புகளுக்கு 9894774410, 9080820107 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications