"என் உடம்பு பிடிச்சு போச்சு..பெண்களா வந்து விழுந்தாங்க.. யாரையும் ஏமாத்தலை".. நாகர்கோவில் காசி ஷாக்!

நாகர்கோயில் காசியிடம் இன்று 3-வது நாள் விசாரணை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: "என் உடம்பு பெண்களுக்கு பிடிச்சிருந்தது.. அதை பார்த்து என்கிட்ட விழுந்துட்டாங்க... நான் அவங்களுடன் ஜாலியா இருந்தேன்.. ஆனா, நானா போய் எந்த பொண்ணையும் ஏமாத்தல.. யாரையும் கல்யாணம் பண்ணியும் ஏமாத்தல.. எத்தனையோ பெண்கள் என்கிட்ட ஜாலியா பழகி இருக்காங்க.. அதெல்லாம் லிஸ்ட் போட்டுட்டு சொல்ல முடியாது." என்று அசால்ட் & கூலாக வாக்குமூலம் சொல்லி வருகிறாராம் நாகர்கோவில் காசி!!!

Recommended Video

    Nagercoil Kasi News : சிபிசிஐடி மாற்றப்பட்ட காசி வழக்கு

    கன்னியாகுமரி: காசியுடன் வீடியோவில் நெருக்கமாக இருந்த அந்த விஐபி மனைவி யார்? நடிகரின் மகள் யார்? போலீஸ் அதிகாரியின் மகள் யார்? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வரபோகிறது.. காசியை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது.. அதனால் காசி விவகாரம் சூடு பிடித்துள்ளது!!

     nagarcoil kasi: police inquiring nagarcoil kasi for the third day

    26 வயசு காசி, ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. சுகுனா சிக்கன் குமரி மாவட்ட டீலர்தான் காசி.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

    இதைதவிர, நில மோசடி வழக்கு, கந்துவட்டி புகார்களும் காசி மீது உள்ளன.. இதுவரை 17 வயது சிறுமி உட்பட 6 பேர் காசி மீது புகார் தந்துள்ளனர்.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.. அவரது லேப்டாப்களை பறிமுதல் செய்து விசாரணை நடக்கிறது. ஏற்கனவே காசியிடம் 3 நாள் போலீஸ் விசாரணை நடந்தது.

    இந்த 3 நாள் விசாரணையிலும் காசி வாயே திறக்கவில்லை என்று கூறப்பட்டது.. போலீசாருக்கு சரியான முழு ஒத்துழைப்பும் தரவில்லை.. ஒவ்வொரு வார்த்தையையும் காசியிடம் இருந்து பிடுங்குவதற்கே போலீசார் படாத பட்டுள்ளனர்.. காசியின் லேப்டாப்பில் பெண் டாக்டர்கள், பெண் என்ஜினியர்கள், சிறுமிகள், அவர்களின் அம்மாக்கள், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள், தொழிலதிபர்களின் மகள்கள் என இவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சொல்லப்பட்டது.

    இதையெல்லாம் விசாரிக்கவும், காசியுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பின்னணியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் யார் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விசாரிப்பதற்காக போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படியே, இப்போது 2-வது முறை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை துவங்கியது. நேற்றுமுன்தினம் முதல்விசாரணை நடந்தது. வழக்கம்போலவே இந்த 2 நாளிலும் காசி வாயை தொறக்கவே இல்லையாம்.

    லேப்டாப்பில் உள்ள ஆபாச வீடியோக்களை காட்டி, இவர்கள் எல்லாம் யார் என்று கேட்டனர்.. அதேபோல பென்டிரைவரில் உள்ள நிர்வாண வீடியோ, போட்டோக்களையும் காட்டி அந்த பெண்கள் குறித்து விசாரித்தனர்.. அதை பார்த்த உடனேயே காசிக்கு குஷி வந்துவிட்டதாம்.. இவர்கள் எல்லாம் என்கிட்ட பழகியவர்கள் என்றாராம்.

    பெண்களின் விவரம் குறித்து கேட்டதற்கு, 'எத்தனையோ பெண்கள் என்கிட்ட ஜாலியா பழகி இருக்காங்க.. அதெல்லாம் லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது.. ஆனால் நானா போய் யாரையும் ஏமாத்தல.. என்கிட்ட வந்தவர்கள்கிட்ட நான் ஜாலியா இருந்தேன்.. கொஞ்சம் பண தேவை இருந்தது.. அதனால் சில பெண்களின் நட்பை பயன்படுத்தி கொண்டேன்..அதுக்குன்னு கல்யாணம் பண்ணி எந்த பொண்ணையும் நான் ஏமாத்தல.

    என் பேச்சு, என் உடம்பு அவங்களுக்கு பிடிச்சிருந்தது.. அதை பார்த்து என்கிட்ட விழுந்துட்டாங்க. ஆனால் தேவையில்லாமல் என் மேல் யார் கம்ப்ளைண்ட் பண்ணாங்களோ அவங்களை கூப்பிட்டு முதல்ல கேளுங்க, நானா அவங்களை ஏமாத்தினேன்னு" என்று அசால்ட் & கூலாக பதில் அளித்தாராம் காசி.

    எத்தனை பேருடன் பழக்கம் என்றுதான் காசி சொல்கிறாராம்.. ஆனால் புகார் அளித்தவர்கள் பற்றி எனக்கு என்ன தெரியும் என்று பதில் கேள்வி கேட்கிறாராம்.. மொத்தம் 6 பேர் இதுவரை காசி மீது வந்துள்ளது.. இதில் யாரை பற்றி காசி சொல்கிறார் என தெரியவில்லை.. அந்த வீடியோவில் உள்ள பெண்கள் யார் யார் என்று தொடர்பு கொண்டால் யாருமே பேச மறுக்கிறார்களாம், பெரும்பாலானோர் சிறுவயது பெண்கள், மீதி உள்ளோர் குடும்ப பெண்கள்.. அதனால் யாருமே காசி பற்றி எதையும் சொல்ல பயப்படுவதாக சொல்கிறார்கள். எனினும் இன்னும் 4 நாள் விசாரணை மீதமுள்ளதால், எப்படியும் மொத்த விஷயத்தையும் நம் போலீசார் காசியிடம் வாங்கி விடுவார்கள் என்றே தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+