கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் காந்தியை எதிர்த்து மோதி ஜெயிக்கணும்.. அசராமல் கூறும் தேர்தல் மன்னன் நாகூர் மீரான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் காந்தியை எதிர்த்து மோதி ஜெயிக்கணும் - நாகூர் மீரான்!

    கன்னியாகுமரி: மேட்டூர் பத்மராஜனுக்கு சரியான சவாலாக விளங்குகிறார் கன்னியாகுமரி நாகூர் மீரான்.

    சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து 50 முறை போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் தேர்தல் மன்னனாக அவர் விளங்கி வருகிறார்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த நாகூர் மீரான் 51 ஆவது முறையாக குமரி மக்களவை தொகுதிக்கு மனு தாக்கல் செய்துள்ளார். வரும் காலத்தில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுவதே தனது லட்சியம் என கூறும் நாகூர் மீரான் நிச்சயம் நான் ஒரு நாள் வெற்றி பெறுவேன் எனவும் அசராமல் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

    நான் கற்ற பரம்பரை.. குற்றப் பரம்பரை அல்ல.. தமிழிசை வைரல் டிவிட்!நான் கற்ற பரம்பரை.. குற்றப் பரம்பரை அல்ல.. தமிழிசை வைரல் டிவிட்!

    புகைப்படக் கலைஞர்

    புகைப்படக் கலைஞர்

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் நாகூர் மீரான். புகைப்பட கலைஞரான இவர் தேர்தல் களத்துக்கு வந்ததன் பின்னணியில் ஒரு வலி நிறைந்த சம்பவம் அட்கியுள்ளது.

    லஞ்சத்தால் வந்த வேகம்

    லஞ்சத்தால் வந்த வேகம்

    கடந்த 1981 ஆம் ஆண்டு இவர் ஒரு ஸ்டுடியோ வைத்திருந்தார். அந்த ஸ்டுடியோவை, லஞ்சம் கொடுக்காத காரணத்தால் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து விட்டனராம். இதனால் மனம் உடைந்தார் நாகூர் மீரான்.

    தட்டிக் கேட்பேன்

    தட்டிக் கேட்பேன்

    இதனால் மனம் உடைந்து இருந்த இவருக்கு அதிகாரிகள் செய்யும் தவறுகளை தட்டி கேட்க வேகம் பிறந்தது. அது நடக்க வேண்டுமானால் சட்டசபைக்கு அல்லது நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் நடக்கும் என்பதால்தான் இவர் அரசியலுக்கே வந்தாராம்.

    விடாமல் தொடர் போட்டி

    விடாமல் தொடர் போட்டி

    அன்று முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார் மீரான். குமரியில் மட்டுமல்லாது தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு தலைவர்களை எதிர்த்து போட்டியிட்ட அவர் தற்போது 51 ஆவது முறையாக குமரி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    7வது இட சாதனை

    7வது இட சாதனை

    இதற்காக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான பிரசாந்த் மு வடநேரே முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார், எதற்க்காக இப்படி போட்டியிடுகிறீர்கள் என கேட்டதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டத்தில் 7 இடத்தை பிடித்ததாக கூறி ஆச்சரியப்படுத்தினார்.

    ராகுலை எதிர்ப்பேன்

    ராகுலை எதிர்ப்பேன்

    நான் என்றாவது ஒருநாள் வெற்றி பெறுவேன் . காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவதே தனது லட்சியம் என்றும் கொஞ்சம் கூட அசராமல் கூறி நம்மை எகிற வைத்தார் நாகூர் மீரான்.

    நம்பிக்கை.. அதுதானே எல்லாம்!

    English summary
    Independent candidate Nagore Meeran has expressed his willingness to defeat Congress president Rahul Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X