“நீ அழகா இருக்க.. கல்யாணம் பண்ணிக்கலாம்” மாணவியிடம் பாலியல் சீண்டல்! உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 11ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது செல்போனை ஆய்வு செய்த போலீசார், ஏராளமான ஆபாச படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி வட்டவிளை காமராஜர் தெருவை சேர்ந்த சுந்தர்சிங்(32). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்திருக்கிறார். சேர்ந்த சில நாட்களிலேயே இதே பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வரும் மாணவியை ஆசை வார்த்தை கூறி தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அந்த மாணவிக்கு மொபைல் போனை வாங்கி கொடுத்துள்ள அவர், தினமும் ஃபோன் செய்து பேசியிருக்கிறார்.

தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து, மாணவிடம், "நீ ரொம்ப அழகா இருக்க. கல்யாணம் பண்ணிக்கலாம்" என ஆசை வார்த்தையில் சுந்தர்சிங் பேசியுள்ளார். பின்னர் இந்த ஃபோன் கால், வீடியோ காலாக மாறியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் டியூஷன் சென்ற மாணவியை மடக்கி தனது காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து பலமுறை வெவ்வேறு இடங்களில் வைத்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். மட்டுமல்லாது இதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
மாணவியின் பெற்றோர் சாமானியர்கள். அவர்களுக்கு பள்ளியில் நடக்கும் விஷயங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால், சுந்தர்சிங் அடிக்கடி மாணவியை தனியாக அழைப்பதும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் மாணவியின் உளவியளை கடுயைமாக பாதித்திருக்கிறது. எனவே தனக்கு நடக்கும் கொடுமையை உடனடியாக பெற்றோரிடம் கூறியுள்ளார். விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரையடுத்து உடற்கல்வி ஆசிரியர் சுந்தர்சிங்கை போக்சோ சட்டத்தில் உடனடியாக கைது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்திருக்கிறது. அதில் பெரும்பாலும் சிறுமிகளே இருந்திருக்கின்றனர். மட்டுமல்லாது இவரது ஆசை வலையில் ஆசிரியர் ஒருவரும் வீழ்ந்திருப்பது இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், "கணவனை இழந்த பெண்கள், வெளிநாட்டில் கணவர் இருக்கும் நிலையில் தனிமையில் வசித்து வரும் பெண்கள் என இவர்களை குறி வைத்துதான் சுந்தர்சிங் செயல்பட்டு வந்திருக்கிறார். இதற்கு முன்னர் இப்படி ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இதற்கான ஆபாச சாட்கள் சிக்கியுள்ளன. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளனர்.
11ம் வகுப்பு பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி உடற்கல்வி ஆசியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications