கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி.. முக்கிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்!
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார்.
Recommended Video

கன்னியாகுமரி: தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். கன்னியாகுமரியில் நடந்த அரசு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
பிரதமர் மோடி கடந்த மாதம் இரண்டு முறை தமிழகம் வந்தார். முதல்முறை மதுரை மாநாட்டில் கலந்து கொள்ளவும், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காகவும் வந்தார். அதன்பின் திருப்பூர் வந்த பிரதமர் மோடி, பாஜக மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் அவர் கலந்து கொண்டார். கன்னியாகுமரியில் நடக்கும் நலத்திட்ட பணிகள் துவக்க விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார் .

வருகை புரிந்தார்
இன்று காலை விசாகபட்டினத்திற்கு அவர் விமானம் மூலம் வந்தார். அங்கு கட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டு பின் அவர் விமானம் மூலம், திருவனந்தபுரம் வருகை புரிந்தார். பின் அங்கிருந்து மதியம் அவர் ஹெலிகாப்டர் மூலம் தற்போது குமரி வந்துள்ளார்.

அடிக்கல்
இன்று மதுரை - சென்னை இடையிலான தேஜஸ் ரயில் சேவையை அவர் தொடங்கினார். மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். பணகுடி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை, மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பால திறப்பு ஆகிய விழாவிலும் கலந்து கொண்டார்.

பெரிய அளவில்
இதற்காக பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் நடக்கும் இந்த விழாவில் அதிமுக - பாஜக கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். எமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அமைச்சர்கள், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆளுநர் புரோஹித் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
|
கவனம் பெற்றது
மோடிக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அதிமுக - பாஜக - பாமக கூட்டணி முடிவானதை அடுத்து முதல்முறையாக மோடி தமிழகம் வந்துள்ளார். இதனால் அவரின் வருகை அதிக கவனம் பெற்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications