கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரிப்பு.. பிரகாஷ் காரத் விமர்சனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரிப்பு..பிரகாஷ் காரத் பேச்சு-வீடியோ

    கன்னியாகுமரி: கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை தற்போது கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசுகையில், மோடி அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உதவுவதோடு அம்பானி, அதானி போன்றோருக்கு இந்தியாவின் இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு உதவி வருகிறது.

     Prakash Karat accuses Modi government for unemployment

    தனியாருக்கு உதவும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களை நலிவடைய செய்கிறது. ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என மோடி கூறிய நிலையில், தற்போது தேசத்தின் பாதுகாப்பு ஊழலால் சமரசம் செய்யப்படுகிறது.

    தனது நண்பர் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு எவ்வித அனுபவமும் இல்லாத பாதுகாப்பு துறையில் பல ஆயிரம் கோடி செலவில் அம்பானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

     Prakash Karat accuses Modi government for unemployment

    ரபேல் முறைகேடு தொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு மத்திய அரசு மிரட்டல் விடுக்கிறது. கடந்த தேர்தலின்போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என கூறிய மோடி கூறியபடி, கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும்.

    ஏன் அந்த சிங்கம்?.. மோடி ஷேர் செய்த ஒரு டிவிட்.. பெரிய விவாதம்.. காரணம் என்னவோ? ஏன் அந்த சிங்கம்?.. மோடி ஷேர் செய்த ஒரு டிவிட்.. பெரிய விவாதம்.. காரணம் என்னவோ?

    ஆனால், அரசு கூறும் புள்ளி விபரத்தில், கடந்த 45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விபரங்கள் வெளியே வராத வகையில் மத்திய அரசு மூடிமறைக்கிறது என குற்றஞ்சாட்டினார்.

    English summary
    General Secretary of the Communist party of India (Marxist) Prakash Karat says that Unemployment happens in Modi Government which has not happen this much in 45 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X