கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹாரன் அடித்து கொந்தளித்த மக்கள்.. அப்படிதான் பேசுவேன்.. என்ன சவுண்டு.. நடுரோட்டில் பிரேமலதா அடாவடி

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பிரச்சாரம்..பயந்தோடும் கூட்டணி கட்சிகள்

    நாகர்கோவில்: 4 ரோடுகள் சந்திக்கும் ஜங்ஷனில் பாதையை அடைத்து கொண்டு பிரேமலதா பிரச்சாரம் செய்ததால், வாகன ஓட்டிகள் எல்லாரும் டென்ஷன் ஆகிவிட்டார்கள்!

    கன்னியாகுமரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் செய்ய வந்தார்.

    தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பில் திறந்த வேனில் நின்றுகொண்டு ஓட்டு கேட்டு கொண்டிருந்தார். இந்த இடம் 4 வழி சாலைகள் சந்திக்கும் பகுதி. மிக முக்கியமான ஜங்ஷன் என்பதால் அந்த பக்கம் நிறைய வாகனங்கள் எப்போதுமே சென்று கொண்டிருக்கும்.

    மேடம்.. கேப்டன் எப்படி இருக்கார்.. முதல்ல அதை சொல்லுங்க.. நல்லா இருக்காரா?மேடம்.. கேப்டன் எப்படி இருக்கார்.. முதல்ல அதை சொல்லுங்க.. நல்லா இருக்காரா?".. துளைத்தெடுத்த மக்கள்

    நெருக்கடி

    நெருக்கடி

    பிரேமலதா நீண்ட நேரத்துக்கு பேசி கொண்டே இருந்தார். இதனால் டிராபிக் ஜாம் ஆக ஆரம்பித்தது. கார், டூவீலர்கள் என எல்லாமே அப்படி அப்படியே நின்றுவிட்டன. யாராலும் ஒரு அடி கூட நகர முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் எல்லோருமே டென்ஷன் ஆகிவிடவும், அவர்களது வண்டி ஹாரனை அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

    என்ன சவுண்டு?

    என்ன சவுண்டு?

    இப்படி திடீரென்று எல்லா பக்கமும் ஹாரன் சத்தம் வரவும் பிரேமலதாவுக்கு கோபம் வந்து வந்துவிட்டது. ஆனால் ஹாரன் அடிப்பவர்களிடம் அதை வெளிப்படுத்தாமல், பிரச்சாரத்தின் மூலம் அதை சொன்னார். "நான் இங்க பிரச்சாரம் செய்றதை பார்த்துட்டு பயப்படறவங்க எல்லாம் இப்படி ஹாரன் அடிச்சு தொந்தரவு பண்றாங்க. இதெல்லாம் என்ன சவுண்டு? கேவலம்!

    பயப்பட மாட்டோம்

    பயப்பட மாட்டோம்

    நாங்க முறைப்படி பெர்மிஷன் வாங்கிட்டுதான் இப்படி பிரச்சாரம் செய்றோம். அதனால இதை தடுக்க யாருக்குமே அதிகாரம் இல்லை. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.. போய் எங்காவது இதை வெச்சுக்கீங்க. எங்க கிட்ட நடக்காது.

    பயம் வந்துடுச்சு

    பயம் வந்துடுச்சு

    நேருக்கு நேராக மோதணும். பின்னால நின்னுக்கிட்டு ஹாரன் அடிக்கிறவங்க கோழைகள். நான் இப்போ இன்னும் 2 மணி நேரம்கூட பேசுவேன். எத்தனை எதிர்ப்புகள் வரட்டும்.. எதிர்ப்புகளை சந்தித்து வளர்ந்த கட்சிதான் தேமுதிக. நான் பேச பேச எதிர்க்கட்சிக்காரங்களுக்கு பயம் வந்துடுச்சு" என்றார்.

    English summary
    Premalatha Vijayakanth Collected the Vote for Pon. Radha Krishnan in Kanniyakumari Constitution and was angry when Horn sounded out during the campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X