சபரிமலை என்ன கேரளத்துக்கு மட்டுமா சொந்தம்.. கட்டுப்பாடுகளை நீக்குங்க.. சொல்வது பொன் ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி: சபரிமலை கேரள மாநிலத்துக்கு மட்டும் சொந்தம் அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது.
கேரளா மட்டுமின்றி பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் மிக அதிகமாக சபரிமலைக்கு செல்கின்றனர்.

கொரோனா காரணமாக சபரிமலை கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பம்பை ஆற்றில் குளிக்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கொரோனாவை கருத்தில் கொண்டு நெய் அபிஷேகம் உள்ளிட்டவற்றுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.
இந்த நிலையில் சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய அவர், ' கொரோனா காரணமாக கேரள அரசு சபரிமலையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சபரிமலை கேரளத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை அந்த மாநில அரசு உணர வேண்டும். நெய் அபிஷேகம் போன்றவற்றுக்கு அனுமதி வழங்குவது பற்றி, முதல்வர் பினராயி விஜயன் பரிசீலனை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ' காசிக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1813-ம் ஆண்டு முதல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் காசியில் பூஜை, சடங்குகளை செய்து வருகின்றனர். மோடி ஆட்சியில்தான் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 13-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.
-
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
மிஸ்ஸான க.பாளைம்.. ஆதரவு கோரிய அதிமுக வேட்பாளரிடம் அண்ணாமலை சொன்ன வார்த்தை.. யாருமே எதிர்பார்க்கலை -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே












Click it and Unblock the Notifications