Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமரியில் பாடம் நடத்திய டீச்சரின் மகள் கல்யாணத்தில்.. மாணவி நடத்திய வாழ்நாளில் மறக்க முடியாத பாடம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வந்த பெண் 10 பவுன் நகையை திருடியதால் வசமாக சிக்கினார். எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அழகியமண்டபம் அருகே இருக்கின்றன கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் நடந்தது. பின்னர் அதன் அருகிலேயே உள்ள திருமண மண்டபத்தில் விருந்து மற்றும் வரவேற்பும் நடந்தது.

Student arrested for stealing gold from her headmaster s daughter s wedding near Kanyakumari

இதற்காக திருமணம் முடிந்த கையோடு, திருமண மண்டபத்துக்கு வந்த மணப்பெண் அலங்காரம் செய்வதற்காக அறைக்கு சென்றுள்ளார் புதுப்பெண். அங்கு அவருக்கு பனச்சமூடு அருகே அழகு நிலையம் நடத்தி வரும் பெண் ஒருவர் அலங்காரம் செய்தார். அந்த பெண் 8 மாத கர்ப்பிணி ஆவார்.

அவர் அலங்காரம் செய்து கொண்டிருந்த போது மணப்பெண்ணின் ஒரு தங்க சங்கிலியில் உள்ள கொக்கியை இணைக்க முடியவில்லை. உடனே அருகில் நின்ற மணப்பெண்ணின் சகோதரி தனது கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை கழற்றி அதில் உள்ள கொக்கியை மணமகளின் நகையில் இணைத்துள்ளார். பின்னர் சகோதரியின் நகையை அருகில் இருந்த மேஜை மீது வைத்திருக்கிறார். அலங்காரம் முடிந்ததும் மணப்பெண்ணும், உறவினர்களும் அவசரம் அவசரமாக மேடைக்கு சென்றுவிட்டனர்.

தொடர்ந்து கேக் வெட்டும் சடங்கு, விருந்து உபசரணை முடிந்த பின்பு வீடுகளுக்கு சென்றுள்ளார்கள். மாலை 3 மணிக்கு மணப்பெண்ணின் சகோதரிக்கு மண்டபத்தில் தான் கழற்றி வைத்த 10 பவுன் நகை நினைவுக்கு வந்தது. உடனே அவர் மண்டபத்துக்கு வந்து நகையை தேடினார். ஆனால் அங்கு நகையை காணாததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மணப்பெண்ணுடன் கடைசி வரை பெண் அழகு கலைஞர் தான் உடன் இருந்தார். இதனால் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு நகையை குறித்து கேட்டனர். அப்போது அவர் நகையை பார்க்கவில்லை என்று தெரிவித்தார். ஆனால் அவர் தான் நகையை எடுத்திருக்க வேண்டும் என தலைமை ஆசிரியையின் குடும்பத்தினர் உறுதியாக நம்பினார்கள். இதையடுத்து திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சீதாலெட்சுமி, ஏட்டு சுபின் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்காக பெண் அழகு கலைஞரை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரித்தனர். முதலில் அவர் நகையை எடுக்கவில்லை பிடிவாதமாக கூறி வந்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் நகையை எடுத்துக்கொண்டதை ஒப்புக்கொண்டார். அத்துடன் நகையை தனது வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்குச் சென்று நகையை மீட்டு மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்கள்.

இந்தநிலையில் அந்த பெண் அழகு கலைஞர் போலீஸ் நிலையத்துக்கு கணவருடன் வந்து தன்னுடையை தவறுக்கு மன்னிப்பு கேட்டு எழுதிக்கொடுத்தார். அத்துடன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையும் நகை திருப்பிக்கிடைத்ததால் புகார் மீது நடவடிக்கை தேவை இல்லை என்று கூறினார்கள். நகையை திருடிய பெண் அழகு கலைஞர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையின் முன்னாள் மாணவி ஆவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+