கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்மலா சீதாராமனும் தமிழகம்தான்.. அபிநந்தனும் தமிழகம்தான்.. குமரியில் பிரதமர் மோடி பேச்சு!

இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், விமானப்படை விமானி அபிநந்தனும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பெருமையாக பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், விமானப்படை விமானி அபிநந்தனும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பெருமையாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்து இருக்கிறார். கன்னியாகுமரியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

பாஜக செய்த நலத்திட்டங்கள் குறித்து அவர் பட்டியலிட்டர். அதிமுக ஆட்சி குறித்து அவர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

வணக்கம் என்று பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அவர் தனது உரையில், '' அம்மா ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து என் உரையை தொடங்குகிறேன்.இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர். விமானப்படை விமானி அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர்.

பிரதமர் மோடி ஒரு நரசிம்ம அவதாரம்... தீவிரவாதிகளை அழித்தவர்... கன்னியாகுமரி விழாவில் ஓபிஎஸ் ஐஸ் மழை பிரதமர் மோடி ஒரு நரசிம்ம அவதாரம்... தீவிரவாதிகளை அழித்தவர்... கன்னியாகுமரி விழாவில் ஓபிஎஸ் ஐஸ் மழை

திட்டம்

திட்டம்

விவேகானந்தா கேந்திராவிற்கு என் பாராட்டுக்கள், அதன் சமூக பணிகள் பாராட்டத்தக்கது. நாம் பல திட்டங்களை சற்று நேரம் முன் தொடங்கி வைத்தோம். சாலைகள், பாலங்கள், ரயில் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம். அதிவேக தேஜஸ் ரயிலை தொடங்கி வைத்துள்ளோம்.இது மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உருவாக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டினேன்

அடிக்கல் நாட்டினேன்

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயிலை அடிக்கல் நாட்டி உள்ளேன். இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பாஜக ஆட்சியின் கீழ் நாடு மிக வேகமாக வளர்கிறது. எதிர்கால தலைமுறைக்கான கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். விவசாயிகளுக்கு ரூ.6000 கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எத்தனை விவசாயிகள்

எத்தனை விவசாயிகள்

1.10 கோடி விவசாயிகளுக்கு இதுவரை இதில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 24 மணி நேரமும் பாஜக உழைத்து வருகிறது. உலகின் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதனால் பலர் பயன் பெற்றுள்ளனர்.

கடன் தள்ளுபடி

கடன் தள்ளுபடி

காங்கிரசின் கடன் தள்ளுபடி வாக்குறுதி பொய்யானது: அதனால் பயன் இல்லை. இது தேர்தலுக்கான திட்டம் மட்டுமே: வேறு எதுவும் கிடையாது. இதனால் ஒரு சிலர் மட்டுமே பயன் பெறுவார்கள். ஆனால் எங்கள் திட்டம் மூலம் எல்லோரும் பயன் பெறுவார்கள், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Tamilnadu gave Nirmala Sitharaman adn Abhinandan to India says PM Modi in Kanniyakumari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X