Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விட்ற மாட்டோம்".. கேவலமா இருக்கு.. ஆள்வதற்கே அருகதை கிடையாது.. திமுகவை டென்ஷனாக்கியது யார்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: தமிழக அரசு செந்தில் பாலாஜிக்கு ஆதரவு கொடுத்தால் ஊழலுக்குத் துணை போவதாக அர்த்தம்' என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் திட்டவட்டமாக பொன்.ராதா கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அதிமுகவைவிட, பாஜகதான் பிஸியாக காணப்படுகிறது.. நேற்றிரவு முதலே, இது தொடர்பான விவகாரங்களை வெளியிட்டும், கருத்து சொல்லி வருகிறார்கள்.

tamilnadu government should not support senthil balaji, says bjp sr leadeer pon radhakrishnan

கேவலமா இருக்கு: பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ட்வீட்களை பதிவிட்டு திமுகவை சாடியிருந்தார்... "செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டத்திற்குட்பட்டு நடந்து கொள்வது தான் நல்லது. இல்லையேல் அறிவாலயத்தில் மானம் சந்தி சிரிக்கும். அ.ராசா, கனிமொழி கைதுகளின் போது கூட இவ்வளவு அலப்பறை இருக்கவில்லை என்று கூறியிருந்தார்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, செந்தில் பாலாஜிக்கு எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.. காரணம், அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலைதான் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.. இதனால்தான் சந்தேகம் உள்ளது. எனவே எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை தர வேண்டும்.. அப்போதுதான் உண்மை தெரிய வரும்.

மாறன் சொத்து: கருணாநிதிக்கு எவ்வளவு சொத்து இருந்தது? மாறன் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருந்தது? முதல்வர் மருமகன் சபரீசனுக்கு முப்பது ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. இதையெல்லாம் நான் சொல்லல.. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்னார்... பாஜக சொல்லவில்லை.. திமுக மீது, திமுக அமைச்சர்களாலேயே குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார் மூத்த தலைவர் எச்.ராஜா.

tamilnadu government should not support senthil balaji, says bjp sr leadeer pon radhakrishnan

பொன்.ராதாகிருஷ்ணன்: அந்தவகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கவேண்டும்" என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. அது யாராக இருந்தாலும் பொருந்தும். அமைச்சராக இருந்தாலும் பொருந்தும்... தன்னுடைய தூய்மையை நிரூபிக்கும் பொறுப்பு செந்தில் பாலாஜிக்கு உள்ளது. அவருக்கு திமுக துணைபோகக் கூடாது.

அவர் அதை நிரூபிக்கும்வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கவேண்டும். அவரை அமைச்சரவையில் இருந்து விலக்கி வைப்பது அரசுக்கும், திமுகவுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும்.. திமுக செந்தில் பாலாஜிக்குத் துணை நின்றால் ஆள்வதற்கே அருகதை அற்றவர்கள் என அர்த்தம்.

புனிதம் ஆகிவிட்டாரா: 2015-ம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க இதே வழக்கில் திமுகவினரே கோரிக்கை விதித்து இருந்தனர். அவர் இப்போது திமுகவுக்கு வந்துவிட்டதால் கங்கையில் குளித்து புனிதம் ஆகிவிட்டாரா?

முதல்வர் செந்தில்பாலாஜியைப் போய் பார்த்தது உண்மையிலேயே இதயப் பிரச்சினை தானா? எனப் பார்த்தது போல் உள்ளது. இதைவிட கேவலமான செயல் எதுவும் இல்லை. திமுக சுமத்திய குற்றத்திலேயே இந்த வழக்கு இன்று நீடித்து, கைதுவரை வந்து இருப்பதை செந்தில் பாலாஜி உணரவேண்டும். யார் தவறுசெய்தாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+