மோடியின் தியானம் முடிந்து.. கண்ணை திறந்ததும் இதுதான் நடக்கும்! அடித்து சொல்லும் பிரசாந்த் பூஷன்
கன்னியாகுமரி: பிரதமர் மோடியின் தியானத்தில் என்ன நடக்கும்? அவர் தியானம் முடித்து கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தல் குறித்து தீவிரமான கருத்துக்களை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்து வருகிறார். 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வி அடையும் பட்சத்தில் முதல் சிக்கல் யாருக்கு ஏற்படும் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மோடிக்கு ஆதரவாக இருக்கும் Godi மீடியா என்று அழைக்கப்படும் வட இந்திய ஊடகங்கள் மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜூன் 4-க்கு பிறகு, Godi மீடியாக்களும், அதன் தொகுப்பாளர்களும், ஆசிரியர்களும் மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்க நேரிடும். ஒருமைப்பாட்டின் உட்கருத்தை அவர்கள் எப்போதோ சிதைத்துவிட்டனர். தேர்தல் முடிவிற்கு பிறகு அவர்களின் அதிகாரமும், பணமும் சேர்ந்து சிதைய இருக்கிறது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எச்சரித்துள்ளார்.
பாஜக தோல்வியை உணர்ந்து விட்டது. அதனால்தான் பல துறைகளுக்கு அவசர அவசரமாக பணி நீட்டிப்பு செய்கிறது. அவசர அவசரமாக நியமனங்களை மேற்கொள்கிறது. தோல்வி வரப்போவதை உணர்ந்தே பாஜக இப்படி செய்கிறது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எச்சரித்துள்ளார்.
தியானம் செய்வார்?: இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் தியானத்தில் என்ன நடக்கும்? அவர் தியானம் முடித்து கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
அதில், 30ம் தேதி தேர்தல் பிரசாரம் முடிந்ததும் மோடியின் கடைசி தேர்தல் பிரச்சார உத்தி இந்த தியானத்தில் இருந்து ஆரம்பமாகும். அங்கே கேமராக்கள் மட்டுமே இருக்கும். 2 ஆயிரம் வீரர்கள் கொண்ட காவல் படை அவரைப் பாதுகாக்கும். அப்பகுதி முழுவதும் மக்கள் நுழையாத வண்ணம் தடுக்கப்படுவார்கள்.
இப்போது கேள்வி என்னவென்றால், தியானம் முடிந்ததும் பையை எடுத்து கொண்டு போவதை பற்றி யோசிப்பாரா? அல்லது புதிய அரசாங்கத்தை எப்படி சட்டத்தின் விதிகளை மீறி உருவாக்கலாம் என்பதை பற்றி சிந்திப்பாரா? என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கிண்டல் செய்துள்ளார்.
மோடி தியானம் கன்னியாகுமரி: நேற்று லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய உள்ளார். நேற்று தமிழ்நாடு வந்த மோடி, குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய தொடங்கி உள்ளார். கடந்த முறை 2019 லோக்சபா தேர்தலுக்கு பின் கேதார் நாத் குகையில் மோடி தியானம் செய்தார்.
#WATCH | Kanniyakumari, Tamil Nadu | PM Narendra Modi meditates at the Vivekananda Rock Memorial, where Swami Vivekananda did meditation. He will meditate here till 1st June pic.twitter.com/X4bvAdgZLs
— ANI (@ANI) May 31, 2024
அதேபோல் இந்த முறை தியானம் செய்கிறார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்.. சேனல்களின் எல்லா கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து பிரச்சாரம் முடிந்த பின்பும் கூட தேர்தலுக்கு முன்பாக மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளார். சுவாமி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் மோடி தியானம் செய்கிறார். இரண்டு நாட்களுக்கு அவர் தியானம் செய்ய உள்ளார்.
48 மணி ஏசி அறையில் அவர் விடாமல் தியானம் செய்வார். தூங்க, குளிக்க மட்டும் பிரேக் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications