விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. பிரதமர் மோடி தியானத்திற்கு இடையே அறிவிப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வரும் நிலையில், தீவிர பாதுகாப்பு சோதனைகளுடன் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் கடும் சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் சுமார் 45 மணி நேரம் அமர்ந்து தியானம் செய்கிறார். நேற்று மாலை தனது தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நாளை பிற்பகல் வரை தியானத்தை தொடர்கிறார். இதன் காரணமாக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுற்றுலா சீசன் உள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். இதன் காரணமாகவும் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் காரணமாகவும் பிரதமர் மோடியின் இந்த ஆன்மிக பயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். எனினும், திட்டமிட்டபடி பிரதமர் மோடி நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.
கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபத்தில் நேற்று மாலை தியானத்தை தொடங்கினார். இந்த தியானம் நாளை வரை தொடரும். அதன்பின் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் பிரதமர் மோடி.
இன்று காலை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த நேரத்தில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர், சூரிய உதயம் பார்ப்பதற்கு மட்டும் தீவிர சோதனைக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகை காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல நேற்று பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகை காரணமாக கடும் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதே சமயம், செல்போன்கள் மூலம் வீடியோ எடுக்கவும் கேமரா கொண்டு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று காலை 7.30 மணி அளவில் முதல் படகு புறப்படுகிறது என்றும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சுற்றுலா பயணிகளை சோதனை செய்த பின் அனுமதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். எனினும், பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபத்திற்கு அனுமதி இல்லை. ஸ்ரீபாத மண்டபம் வரை பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications