விஜய் வசந்த் vs பொன் ராதாகிருஷ்ணன்.. கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பெரிய திருப்பம்.. தந்தி டிவி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் விஜய் வசந்த் இந்த முறை 34 முதல் 40 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 31 முதல் 37 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், பாஜக, பாமக அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் களத்தில் இறங்கி உள்ளன. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் தமிழக தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே மொத்தமாக அடித்து தூக்கும் என்றே கூறியுள்ளன. சில கணிப்புகளில் ஒரிரு இடங்களில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வரும் என்று கணித்துள்ளன.
தமிழ்நாட்டின் பிரபல செய்தி ஊடகமான தந்தி டிவி தனது இரண்டாவது கருத்துக்கணிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பில் திமுக கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
தொகுதி வாரியான நிலவரத்தை பொறுத்தவரை இந்த செய்தியில் கன்னியாகுமரி பற்றி பார்க்க போகிறோம். தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டம் என்று சொல்வதை விட, முதல் மாவட்டம் என்று சொல்லாம். கேரளாவிலிருந்து பிரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவைப் போலவே அரசியல் சூழல் உள்ள பகுதியாகும். இங்கு திமுக அதிமுகவை விட காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் பாஜகவிற்கு செல்வாக்கு அதிகம். இங்கு ரப்பர் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அடுத்தபடியாக மீன் பிடி தொழிலும், சுற்றுலாவும் அதிகமாக உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் இடைத்தேர்தலில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுகிறார். விஜய் வசந்த் இந்த முறை 34 முதல் 40 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், அதிமுக சார்பில் போட்டியிடும் பசலியன் நசரேத் 16 முதல் 22 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது.
அதிமுகவை விட மிக அதிகமாக பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 31 முதல் 37 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மரிய ஜெனிபர் 8 முதல் 11 சதவீதம் வாக்குகளை பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications