"உல்லாசம்".. தனித்தனி ஃபோல்டர்களாம்.. ஒரே நேரத்தில், ஒரே மாதிரி, ஒரே நபர் மீது புகாருடன் வந்த பெண்கள்
குமரியில் திருமணமான பெண்களை குறித்து ஏமாற்றி வரும் இளைஞரை போலீசார் தேடி வருகிறார்கள்
கன்னியாகுமரி: கணவனை பிரிந்து வாழும் பெண்களை மட்டுமே குறி வைத்துள்ளார் அந்த இளைஞர்.. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் திரண்டு போலீசில் புகார் செய்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சமீப காலமாகவே குற்ற செயல்கள் அதிகரித்தபடியே வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.
மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு 27 வயதாகிறது.. இவர் மீது 2 பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.. குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் மற்றும் குழித்துறையை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர் தக்கலை டிஎஸ்பி அலுவலகம், குமரி மாவட்ட எஸ்பி ஆபீஸ் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளனர்.

மிஸ்ட் கால்
குழித்துறையை சேர்ந்த பெண் அளித்த புகாரில், நான் திருமணமானவள்.. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறேன்.... 2021ல் என்னுடைய செல்போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்தது.. அதன்மூலம் மேல்புறம் பகுதியை சேர்ந்த இளைஞர் அறிமுகம் ஆனார்... தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக சொல்லி என்னிடம் பழகினார். அவரது பேச்சில் மயங்கினேன்.. இருவரும் உல்லாசமாக இருந்தோம். அவற்றை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்தார். என்னை திருமணம் செய்வதாக கூறி 15 பவுன் நகைகளையும் வாங்கி சென்றார்.

உல்லாசம்
இந்தநிலையில் அவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது... அதுபற்றி கேட்டதற்கு வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என்று சொல்லி மிரட்டுகிறார். இதேபோல, அவரது உறவினரான பெண் ஒருவருடனும் பழகி, அவரை 2ம் திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றியுள்ளார்... நெருங்கி பழகிய நிலையில் 3 மாதத்தில் அவரையும் ஏமாற்றியுள்ளார், எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அதேபோல, குளச்சலை சேர்ந்த 29 வயது பெண்ணும் புகார் தந்துள்ளார்.

நெருக்கம்
இவருக்கும் திருமணமாகி விட்டது.. 2 குழந்தைகளும் உள்ளன.. இவர் அளித்த புகாரில், நான் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துவிட்டேன்.. தற்சமயம் என்னுடைய அண்ணன் வீட்டில் வசித்து வருகிறேன்... ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து செல்போன் நம்பரை எடுத்து அதன் மூலம், இளைஞர் என்னிடம் பழகினார்... என்னை 2வது திருமணம் செய்வதாகவும், குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக்கொள்வதாகவும் ஆறுதலும் நம்பிக்கையும் சொன்னார்.. அதனால் அவருடன் நெருங்கி பழகினேன். நாங்கள் நெருக்கமாக இருந்ததை வீடியோவில் பதிவு செய்தார்.

ஃபோல்டர்கள்
திருமணம் செய்து கொள்ள போகிறவர் என்பதால், என்னுடைய நகை, பணத்தை எல்லாம் கொடுத்தேன். ஒருநாள் அவரது செல்போனை பார்த்தபோது பல பெண்களுடன் அவர் இருப்பது போன்ற போட்டோக்கள், வீடியோக்கள் அதில் இருந்தன. ஒவ்வொரு பெண்களுடன் நெருக்கமாக இருந்ததை எல்லாம், தனித்தனி ஃபோல்டரில், தனித்தனி பெயரில் பதிவு செய்து வைத்துள்ளார்... என்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டாயே என்று கேட்டதற்கு, என்னை மிரட்டுகிறார், இதுகுறித்து நடவடிக்கை வேண்டும் என்று புகாரில் தெரிவித்து உள்ளார்.

தனிமை பெண்கள்
ஒரேசமயத்தில் 2 பெண்களும், ஒரே நபர் மீது, ஒரே மாதிரியான புகார்களை தந்துள்ளது பெருத்த பரபரப்பை குமரியில் ஏற்படுத்தி வருகிறது.. ஒரே நேரத்தில் பல பெண்களை வலையில் வீழ்த்தி அவர்கள் திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, தலைமறைவாகி உள்ளார் சம்பந்தப்பட்ட நபர்.. அந்த இளைஞர், பெண்களுடன் இருக்கும் போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.. திருமணமாகி, தனிமையில் இருக்கும் பெண்களை மட்டுமே குறி வைத்து, இவர் ஏமாற்றி வந்துள்ளதால், இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் சிலர் இருக்கலாம் என்பதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications