அர்ச்சனா மீது சிவனுக்கு கொள்ளை பிரியம்.. ஆனால் அதை புரிந்து கொள்ளாமல்.. பரிதாபமாக முடிந்த வாழ்க்கை!
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
கன்னியாகுமரி: அர்ச்சனாவுக்குதான் சிவனை சுத்தமாக பிடிக்கவில்லை.. ஆனால் சிவனுக்கு மனைவி அர்ச்சனா என்றால் கொள்ளை பிரியம்.. இதை புரிந்து கொள்ளாமல் அர்ச்சனா முடிவை தேடி கொள்ள.. சடலத்தை பார்த்து கணவன் சிவன் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் சிவன்.. இவரது மனைவி அர்ச்சனா, 24 வயதாகிறது. கடந்த மே மாதம்தான் இவர்களுக்கு கல்யாணம் ஆனது.
அர்ச்சனாவுக்கு அப்பா, அம்மா கிடையாது.. சின்ன வயசிலேயே இறந்துவிட்டதால், அவரது மாமா வீட்டில்தான் அர்ச்சனா வளர்ந்தார்... இப்போது சிவன் என்பவரை பார்த்து கல்யாணம் செய்து வைத்ததும் இதே மாமாதான்.

தற்கொலை
இந்நிலையில் சில தினங்களாகவே மனவருத்தத்தில் இவர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் நேரம்பார்த்து, அர்ச்சனா தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டார்.. அவரது உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்தது.. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தால், நெருப்பில் வெந்து எரிந்து கொண்டிருந்தார் அர்ச்சனா.

விசாரணை
இதை பார்த்து பதறிய போன அவர்கள், உடனடியாக அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் அர்ச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனக்கு நடந்த இந்த கல்யாணத்தில் அர்ச்சனாவுக்கு விருப்பமே இல்லையாம். ஆனால் வெளிப்படையாக விருப்பத்தை கூற தயங்கி உள்ளார்.

சிவன்
தன்னை இவ்வளவு நாள் வளர்த்து ஆளாக்கிய மாமா பேச்சை மீற முடியாமல், அவரது வார்த்தைக்குக் கட்டுப்பட்டுதான் சிவனை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், திருமணம் ஆனதிலிருந்தே 2 பேருக்கும் அடிக்கடி சண்டை இருந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் உண்மை காரணம் முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

கதறி அழுதார்
கல்யாணம் ஆன 8 மாசத்திலேயே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அர்ச்சனாவுக்குதான் சிவனை பிடிக்கவில்லை.. ஆனால் அர்ச்சனா மேல் சிவன் உயிரையை வைத்திருந்தாராம்.. அர்ச்சனாவின் சடலத்தை பார்த்து சிவன் கதறியழுதது அந்த பகுதியினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications