திமுக பெண் கவுன்சிலர் காட்டு பகுதியில் கொலை.. டீக்கடை நடத்தி வந்த தம்பதி கைது! வெளிவந்த ஷாக் காரணம்!
கரூர்: கரூர் அருகே, திமுக பேரூராட்சி பெண் கவுன்சிலர் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டீக்கடை நடத்தி வரும் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சோழகாளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்னசமுத்திரம் பேரூராட்சி திமுக கவுன்சிலராக உள்ளார். ரூபா கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு, கரூர் வந்த அவர் வேலை முடிந்து வீடு திரும்பவில்லை.

இதையடுத்து தங்கராஜ் தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அது ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்துள்ளது. அவரது மகன் கொடுமுடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், பாலமலை அருகே காட்டுப்பகுதியில், பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் அரை நிர்வாணமாக சடலமாக கிடந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பரமத்தி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் ரூபா என்பதையும் உறுதி செய்தனர். பின்னர், ரூபாவின் குடும்பத்தினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் ரூபா கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கரூர் மாவட்டம் நொய்யலில் டீக்கடை நடத்தி வரும் தம்பதியர் ரூபாவை கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, உண்மையைக் கண்டறிந்துள்ளனர். ரூபா தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். கடன் பிரச்சனையில் இருந்து வந்த அவர்கள், ரூபாவை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து ரூபா அணிந்திருந்த 5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ்











Click it and Unblock the Notifications