காலி ஓ ஜிம்கானா.. என்ன ஒரே பனிமூட்டமா இருக்கு? இதாங்க அண்ணாமலை மாநாடு ரிப்போர்ட்.. தாக்கிய காயத்ரி!
கரூர்: அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூரில் நடைபெற்ற பாஜக மாநாட்டில். ஆட்கள் இல்லாமல் காலி சேர்கள் கிடந்ததை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம்.
பாஜக சார்பில் கரூரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக 'மாற்றத்திற்கான மாநாடு' என்ற தலைப்பில் நேற்று இரவு மாநாடு நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை பாஜக முதல் ஆளாக தொடங்கிவிட்டது. பொதுக்கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் என பரபரப்பு காட்டி வருகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய கையோடு பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார் அண்ணாமலை.

நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணாமலை, தனது சொந்த ஊரான கரூரில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதால் பாஜக தொண்டர்கள் கரூர் முழுவதும் அவரை வாழ்த்தி போஸ்டர்கள் ஓட்டியிருந்தனர். நாளைய தமிழகத்தின் முதல்வரே, நாளைய தமிழகத்தின் அரசியல் வரலாறே என்று பரபரப்பான வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
பாஜக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில் நாதன், இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்தார். முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணை தலைவருமான கே.பி.ராமலிங்கம் கரூர் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வந்தார். மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்துகள் அனுப்பி ஆட்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனாலும், பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற இந்த மாநாட்டில் பெரும்பாலான சேர்கள் காலியாகவே இருந்தன. அண்ணாமலை பேசும்போதும், மாநாட்டில் முன் பகுதியில் மட்டுமே கூட்டம் இருந்தது. பல்லாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தும் காலி சேர்களாக இருந்தது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்தது.
பாஜக மாநாட்டில் தலைவர்கள் பேசும்போது காலி சேர்கள் கிடைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், அண்ணாமலை பங்கேற்ற மாநாட்டிற்கு கூட்டம் வராததை கிண்டல் செய்து முன்னாள் பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"தம்பி நீங்க எம்ஜிஆர் மாதிரி ரொம்ப கலரா சும்மா தக தகன்னு இருக்கீங்க..
என்ன ஒரே பனிமூட்டமா இருக்கு.. தம்பி ஆவூண்ணா கூட்டம் கூட்டமா மாநாடுனு கிளம்புகிறார்கள். அங்கே பார் தம்பி, ஒரு கூட்டமே ஆரஞ்சு பச்சை கொடி ஏந்தி ஆரவாரமா வருகிறார்கள். வரும் ஆனா வராது." என சினிமா காட்சியை குறிப்பிட்டு பாஜக மாநாட்டை கிண்டல் செய்துள்ளார் காயத்ரி ரகுராம்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், "அவர் சொல்லும் பொய்களை யார் கேட்பார்கள்? மலிவான அரசியலை யார் பார்ப்பது? காலி ஓ ஜிம்கானா. மேடையில் 200 பேர் ஒருவரையொருவர் நெருக்குகிறார்கள். மற்ற 200 பேர் முன்னால் இருந்து பார்க்கிறார்கள். பின்புறம் முற்றிலும் காலியாக உள்ளது. டெக்னிக்கலாக 400 பேர் கூடும் கூட்டத்தை மட்டும் 1000 பேர் ஆகக் காட்டுவது எங்கள் சினிமா டெக்னிக். உங்களுக்கான அண்ணாமலையின் கூட்டங்களின் உண்மையான ரிப்போர்ட் கார்டு இது" என மோடி, அமித் ஷா ஆகியோரை மென்ஷன் செய்து காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.
-
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications