Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: செந்தில் பாலாஜியை கண்டு அஞ்சும் பாஜக! கரூரில் வேட்பாளர் எங்கே? கெத்து காட்டும் ஜோதிமணி

Subscribe to Oneindia Tamil

கரூர் : செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை கரூரில் போட்டியிடாமல் கோவைக்கு சென்றது ஏன் என கரூர் எம்பி ஜோதிமணி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒன் இந்தியா அரசியல் தளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சி எம்பியாக செயல்படுவது என்பது மிகவும் கடினமானது. கடந்த 5 ஆண்டுகளில் நான் என் தொகுதிக்கு சொன்னதை காட்டிலும் நிறைய செய்துள்ளேன்.

Exclusive Karur MP Jothimani says that Senthil Balaji bridges strong foundation at Karur

நாடாளுமன்றத்தில் பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு குரல் கொடுக்கும் அதே நேரத்தில் அந்த அரசாங்கத்திடம் இருந்து தொகுதிக்கு தேவையான பணிகளை கொண்டு வருவது அந்த அளவுக்கு எளிது கிடையாது. என் தோழி கனிமொழி சொல்வது போல் கல்லில் நார் உரிக்கும் வேலைதான். அந்த நாரை வெற்றிகரமாக உரித்திருக்கிறேன் என்றுதான் நினைத்திருக்கிறேன்.

கரூர் தொகுதிக்கு ரூ 500 கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். அது போல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியையும் நான் சிறப்பாக பயன்படுத்தியுள்ளேன். 2 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி வழங்கப்படவில்லை. முதல் ஆண்டு ரூ 5 கோடியும், 2ஆம் ஆண்டு 3 கோடி என மொத்தம் ரூ 8 கோடியை கொடுக்கவே இல்லை.

எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 51 சதவீதம் கல்விக்கு பயன்படுத்தியிருக்கிறேன். 100 பள்ளிக் கூடங்களில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்திருக்கிறேன். இந்தியாவிலேயே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கல்விக்கு ஒதுக்கிய நிதியில் அதுதான் அதிக நிதியாகும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் கரூர் தொகுதிக்கு முதல்வர் ஸ்டாலினும் நிறைய உதவிகளை செய்துள்ளார்.

மணப்பாறை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் கரூரில் விவசாய கல்லூரியையும் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் கொண்டு வந்துள்ளோம். இந்த கல்லூரிகளை கொண்டு வந்ததில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

கல்விக்கு அடுத்தபடியாக மருத்துவ கட்டமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அதிமுக ஆட்சியில் மருத்துவமனைகளின் அவலத்தை கரூர் மாவட்டத்தில் பார்க்கலாம். மூச்சுத்திணறல் அதிகமாக இருக்கும் நோயாளிகளுக்கு மணப்பாறையில் அரசு தலைமை மருத்துவமனையில் வென்டிலேட்டர் கூட இல்லாத அவலம் இருந்தது.

எங்கெல்லாம் வென்டிலேட்டர் இல்லையோ அங்கெல்லாம் நான் கொண்டு வந்தேன். எனக்கு இந்த ஆண்டு நாடாளுமன்ற சீட் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கும் 30 நாட்கள்தான் கேப் இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களை நானும் செந்தில் பாலாஜியும் அதிகாரிகளுடன் சென்று பாதுகாப்பாக வைத்துவிட்டு இரவு 11 மணிக்கு அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கான ஆலோசனை கூட்டத்தை தொடங்கினோம்.

அந்த இரு தேர்தல்களும் கடுமையான தேர்தல், நாங்கள் கடுமையாக பணியாற்றியுள்ளோம். தமிழகத்தில் ஆளும் கட்சி இல்லை, அராஜகத்தை பாஜகவும் அதிமுகவும் கட்டவிழ்த்துவிட்டனர். அந்த நேரத்தில் செந்தில் பாலாஜி தளபதியாக நின்று அந்த சுமைகளை தாங்கி நடத்தினார். இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.

அமலாக்கத் துறை மூலம் செந்தில் பாலாஜியை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கமாக இருக்கிறது. உடல்நலம் பாதித்த ஒருவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? செந்தில் பாலாஜியை இவர்கள் சிறையிலேயே வைத்திருந்தாலும் பாஜகவுக்கு கரூரில் போட்டியிட பயம் இருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவருக்கு எதிராக நாங்கள் நிறைய உழைத்துள்ளோம். ஆனாலும் செந்தில் பாலாஜி இல்லாவிட்டாலும் கரூரில் போட்டியிட தைரியமில்லாமல் கோவைக்கு போயிருக்கிறார். அங்கும் எப்படியும் ஜெயிக்க போறது கிடையாது.

இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி இல்லாவிட்டாலும் அவர் அமைத்த திமுகவின் கட்டமைப்புகள் வலுவாக இருக்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போதிலும் கட்சி பணிகளில் தொய்வில்லாமல் பணியாற்றிக் கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக திமுகவினர் கரூரில் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+