"விபச்சாரம்".. ரூமில் நுழைந்தால் "அவர்".. அதிர்ந்த போலீஸ்.. சோளக்காட்டில் அராஜகம்.. 12 அயோக்கியர்கள்
கரூரில் சிறுமியை 6 மாத காலமாகவே பலாத்காரம் செய்த 3 பேர் கைதாகி உள்ளனர்
கரூர்: 2 சம்பவங்கள் ஒரே நாளில் நடந்துள்ளது.. இரண்டு சம்பவமுமே பாலியல் வன்கொடுமை சீரழிவு.. இந்த இரட்டை நிகழ்வுகளில், பாலியல் கொடுமையை அரங்கேற்றியவர்கள் யார் யார் என்பதை அறிந்து, கரூர் மாவட்டமே கதிகலங்கி உள்ளது..
முதல் சம்பவம் இதுதான்: குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 16 வயதுதான் ஆகிறது.. தரகம்பட்டி அருகே கோட்டக்கரையான்பட்டியில் உள்ள தன்னுடைய தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஜுன் மாதம் 6ம் தேதி, பக்கத்தில் உள்ள சோளக்காட்டில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.. அப்போது, செங்குளத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெரியசாமிக்கு வயது 65.

ஆடு மேய்க்கும்போது
பெரியசாமி பலாத்காரம் செய்வதை, சிறுமியின் சித்தப்பா இடும்பன் கண்ணால் பார்த்துவிட்டார்.. அதனால் பதறிப்போய் கீழே கிடந்த கம்பை எடுத்து, பெரியசாமியை அடித்து தாக்கினார்.. இதில் பெரியசாமி அங்கிருந்து தப்பி விட்டார்.. ஆனால், தன்னுடைய மகள் என்றும் பாராமல், சிறுமியை அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இடும்பன்.. இந்த சித்தப்பாவுக்கு வயது 31. இதற்கு பிறகு, அந்த பகுதியில் உள்ள சஞ்சீவ் என்பவர் சிறுமியிடம் நெருங்கி பழகி உள்ளார்.. அவரிடம் தனக்கு நடந்ததையெல்லாம் சொல்லி சிறுமி அழவும், அவரும் ஆறுதல் தருவது போல நெருங்கி பழகிஉள்ளார்.. அவரும் சிறுமியிடம் உடலுறவு வைத்துள்ளார்.

உடலுறவு
இது அத்தனையும் 6 மாத காலத்திற்குள் நடந்துள்ளது.. இந்த 6 மாதங்களாக இவர்கள் 3 பேருமே சிறுமியிடம் பலமுறை பலவந்தமாக உடலுறவு கொண்டுள்ளனர்... இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 6 மாதங்களாக இவர்கள் 3 பேரும் சிறுமியை பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்தது. கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு இதுகுறித்து ரகசிய தகவல் கிடைக்கவும், உடனடியாக அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது..

மாறி மாறி
அப்போதுதான், கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் மூன்று பேரும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக மாறி மாறி வன்கொடுமை செய்தது உறுதியானது. இது குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மகளிர் காவல் நிலையம் போலீஸார் 3 பேரையும் போக்சோவில் கைது செய்துள்ளனர். மூன்று பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு, கரூர் ஜெயிலில் தூக்கி வைத்துள்ளனர்.

2வது சம்பவம்
இரண்டாவது சம்பவம் இது: தொழிற்பேட்டை பகுதியில் ஒரு சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.. இந்த புகார்களை தந்தது அந்த பகுதி பொதுமக்கள்தான்.. ஒரே சம்பவம் குறித்து நிறைய புகார்கள் அடுத்தடுத்து வரவும், குழந்தைகள் நல அலுவலர் கனகவல்லி கரூர் மகளிர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.. பிறகு, தனிப்படை ஒன்று இதற்காகவே அமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ரகசியமாக கண்காணிக்கப்பட்டது.. அப்போதுதான் விபச்சாரம் நடப்பது உறுதியானது.. மொத்தம் 8 பேர் சிக்கினார்கள்..

சிதறிடுச்சு
இதில், 3 புரோக்கர்கள் பெண்கள் ஆவர்.. 5 பேர் இளைஞர்கள் ஆவர்.. சாந்தி (42), மேகலா (42), மாயா (45) ஆகிய என்பது 3 பெண் புரோக்கர்கள் பெயர்கள்.. கார்த்தி (28), கார்த்திகேயன்(27), சந்தோஷ் (30), தன்னாசி என்ற சமுத்திரபாண்டி (27), கௌதம் (30) உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.. அப்போதுதான் 2 ஷாக் தகவல்கள் வெளியானது.. இவர்கள் 8 பேரும் பாலியல் தொழில் செய்து வந்தது, ஒரே ஒரு சிறுமியை வைத்துதான்.. அதுவும் நீண்ட நாட்களாகவே இந்த பிஞ்சுவை அடைத்துவைத்து விபச்சாரம் செய்து வந்துள்ளனர்..

மெயின் கருவி
அதுமட்டுமல்ல, சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த விவகாரத்தில் மெயின் கருவியே காந்திகிராமம் பகுதியை மோகன் என்பவர்தான்.. இவர் ஒரு ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஆவார்.. சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்தது இந்த போலீஸ் அதிகாரியா என்பதை அறிந்து, போலீஸ்காரர்களே அதிர்ந்து போய்விட்டார்களாம்..அந்த அதிகாரியும் இப்போது, போக்சோவில் கைதாகி உள்ளார்.. இந்த பாலியல் தொழில் வழக்கில் மொத்தம் 9 பேரும், ஆடு மேய்த்த சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கல் 3 பேரும் கைதாகி கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.. பெண்கள் மீதான வன்முறைகள் வடமாநிலங்களில் மட்டுமே நடப்பதாக நாம் சொல்லிவரும் நிலையில், நம்ம ஊரிலேயே இப்படியெல்லாம் அக்கிரமங்கள் நடப்பதை என்னவென்று சொல்வது?

நாசமாயிடுச்சே
பாலியல் தொழில் செய்வதற்காகவே தனி வீடு எடுக்கப்பட்டுள்ளதாம்.. இந்த கும்பலுக்கு பலிகடாவான அந்த சிறுமிக்கு வயது, வெறும் 15தான்.. 60 வயதான மோகன், இந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்து வந்த நிலையில், வேறு யாராவது இவரால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற விசாரணை துரிதமாகி உள்ளது.. ஓய்வுபெற்ற நிலையிலேயே, இப்படி ஒரு தவறை செய்திருந்தால், பணியில் இருந்தபோது, அதிகாரத்தை காட்டி எத்தனை பெண்களை படுகுழியில் தள்ளி நாசமாக்கியிருப்பார்? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.. காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த எஸ்ஐ மோகனிடம் சிறப்பு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் சமீபத்தில்தான் மோகன் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications