அடங்காத கவுசல்யா.. செல்போன் கடையிலேயே.. காக்கி டிரஸ் ஆதாரத்துடன் போலீசுக்கு போன மனைவி.. மலைத்த கரூர்
பெண் போலீஸ் மீது இளம்பெண் ஒருவர் ஆதாரத்துடன் புகார் தந்துள்ளார்
கரூர்: பெண் போலீஸ் ஒருவரின் காக்கி யூனிபார்மை எடுத்து கொண்டு, கரூர் எஸ்பி அலுவலகத்தில் கண்ணீரும் கம்பலையுமாக நுழைந்த வனிதா என்ற பெண்ணால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.. என்ன காரணம்? யார் இந்த வனிதா?
தனது கணவரோடு திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் பெண் காவலரை தகுந்த ஆதாரத்தோடு மாட்டிவிட நினைத்த பெண், அந்த பெண் காவலரின் காக்கி உடுப்பை எடுத்து வந்து, கரூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டம், செல்லாண்டிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி.. இவரது மனைவி வனிதா... காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்..

செல்போன்
கார்த்தி செல்போன் கடை ஒன்றை வைத்துள்ளார்.. கரூர் செங்குந்தபுரம் பகுதியில் இந்த கடை உள்ளது.. அந்த கடையிலேயே செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யும் வேலையும் செய்கிறார்.. இந்நிலையில் கார்த்திக்கு கவுசல்யா என்ற பெண் போலீசுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. கரூர் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார் கவுசல்யா.. இவர்கள் 2 பேரின் கள்ள உறவு வனிதாவுக்கு தெரியவந்துள்ளது..

எச்சரிக்கை
அதனால் 2 பேரையும் பல முறை கண்டித்துள்ளார்.. எச்சரித்துள்ளார்.. ஆனாலும் 2 பேருமே வனிதாவின் பேச்சை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. இதனால் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த வனிதா, இவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக சிக்க வைக்க பிளான் செய்தார்.. அதன்படி, ஒருநாள் கவுசல்யாவின் போலீஸ் யூனிபார்மை எடுத்து கொண்டு, நேராக கரூர் எஸ்பி ஆபீசுக்கே சென்றுவிட்டார்.

கவுசல்யா
"என் கணவர் நடத்தும் கடையில் கவுசல்யா, எனது கணவரோடு ஜாலியாக இருந்தார்.. அவர்கள் ஒன்றாக இருந்தபோது, கவுசல்யாவின் யூனிபார்மை எடுத்து வந்துவிட்டேன். இந்தாங்க ஆதாரம்... பெண் போலீஸ் கவுசல்யா மீது நடவடிக்கை எடுங்க" என்று புகார் தந்தார்.

விசாரணை
இதையடுத்து, புகாரின் பேரில் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி உத்தரவாதம் தந்துள்ளார். அதன்படி விசாரணையும் ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது. எஸ்பியிடம் புகார் தந்ததையடுத்து, வனிதா செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, "காதலித்துதான் நாங்கள் கல்யாணம் செய்துக்கிட்டோம்.. ஆரம்பத்துல என்மேல ரொம்ப உயிரா இருப்பார்.. இப்பதான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி கவுசல்யா வந்தாள்..

தகராறு
அவர் கடைக்கு செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ண வந்த இடத்தில் உறவு ஏற்பட்டிருக்கு.. ரொம்ப நாளா இருக்கு போலருக்கு.. எனக்கு அப்பறம்தான் விஷயம் தெரிந்தது.. என் கணவரை நான் கண்டித்தேன்.. ஆனால், கவுசல்யாதான் என் புருஷனை மயக்கி வைத்திருக்கிறார்ன்னு தெரியவந்தது.. அதனால், கவுசல்யாகிட்டயே ஒரு வருஷத்துக்கு முன்னாடி நேரடியா பேசினேன்.. என் புருஷனை என்கிட்ட தந்துடுன்னு சொன்னேன்.. அவங்க மறுத்தாங்க..

திருமணம்
அதனால்தான் எஸ்பி ஆபீஸ் வரை வந்து புகார் தர வேண்டியதா போச்சு.. கவுசல்யாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி 2 குழந்தைங்களும் இருக்காங்க.. கார்த்திக்கை விட்டு பிரிஞ்சு போயிடறேன்னு சொல்றாங்க, ஆனால் மறுபடியும் வந்து உறவு வெச்சுக்கறாங்க.. இதனாலதான் எனக்கும் என் கணவருக்கும் தினமும் தகராறு வந்தது.. ஒருகட்டத்தில் என் கணவரும், கௌசல்யாவும் செல்போன் கடையிலேயே நைட்டில் தங்க ஆரம்பிச்சுட்டாங்க...

காக்கி டிரஸ்
அதனாலதான் கவுசல்யாவை ஆதாரத்துடன் மாட்டிவிட நினைத்தேன்.. என் கணவரோட கடைக்கு போனேன். கடைக்குள்ளே கவுசல்யாவின் காக்கி டிரஸ் இருந்தது... அதை எடுத்துகிட்டு வந்துட்டேன். உடனே கவுசல்யா என் வீட்டுக்கு வந்து, காக்கி டிரஸ்ஸை கேட்டாங்க.. என் புருஷனை விட்டுரு, உன் டிரஸ் தந்துடறேன்னு சொன்னேன்.. அதுக்கும் கவுசல்யா ஒத்துக்கல.. வாக்குவாதம்தான் நடந்தது..

புகார்
"ஒரு போலீஸூகிட்டே உன்னோட வேலையை காட்டுறியா?"ன்னு என்னை அடிச்சு கீழே தள்ளிட்டாங்க... அதனால அவங்க யூனிபார்மை எடுத்துட்டு போய் தான்தோன்றிமலை ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன்... ஆனா, அவங்க நடவடிக்கை எடுக்கலை. அதனால்தான், இங்கே நேரா எஸ்பி ஆபீசுக்கே வந்துட்டேன்.. நடவடிக்கை எடுக்கிறதாக சொல்லியிருக்காங்க.. ஒருவேளை என் புருஷனை மீட்டுத்தரலேன்னா நாங்க குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டியதான்" என்றார் அழுதபடி.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications