ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது யார்?... திமுகவுக்கு தம்பிதுரை கேள்வி
கரூர்: ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது திமுக தலைவர் ஸ்டாலின் தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மக்களின் போராட்டத்தை தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தன. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது திமுக தான் என்றும் ஆலை இயங்கக்கூடாது என்று முயற்சி எடுத்தவர் ஜெயலலிதா என்றும் விளக்கமளித்தார்.
இதற்கிடையே, ஆலையை மீண்டும் திறக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகி உள்ளது. அதில், ஆலையை மீண்டும் திறப்பதற்கான சூழல் தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கரூர் அடுத்துள்ள அய்யம்பாளையம், ஜெகதாபி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்த, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சட்ட வல்லுனர்கள் சட்டப்படி சந்திப்பார்கள் என்றும், ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது மு.க. ஸ்டாலின் தான் என்றும் கூறினார். ஆனால் இப்போது ஸ்டாலின் எதிர்த்துப் பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications