அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் வைத்து ‘வசூல்’ வேட்டை.. பாஜக கடும் எச்சரிக்கை.. கரூரில் பரபரப்பு!
கரூர் : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ரசிகர் மன்றம் பெயரில் குளித்தலை குமரேசன் என்பவர் பண வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்த நிலையில், பாஜக வழக்கறிஞர் அணி சார்பாக இதுதொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, இளைஞர்கள் பலரும் அண்ணாமலையைப் பின்தொடர்ந்து, அவரது பேச்சுகளையும், செயல்பாடுகளையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் அண்ணாமலை ஃபேன் கிளப், அண்ணாமலை ஆர்மி என்பது போன்ற பெயரிலான பக்கங்களில் அண்ணாமலையின் பேச்சுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலை ரசிகர் மன்றம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுவதாக தற்போது வெளியாகியுள்ள புகார் பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் சிலர் பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியே, இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் உமாதேவி, குளித்தலை வட்டம், சத்தியமங்கலம் பகுதியில் வசிக்கும் வீரப்பன் மகன் குமரேசன் என்பவருக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குமரேசன், அண்ணாமலை பெயரைப் பயன்படுத்தி பண வசூல் வேட்டையில் இறங்கி இருப்பதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உமாதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி, அவரது பெயரை தவறாக பயன்படுத்தி பணம் வசூல் செய்வதும் அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் ரசிகர் மன்ற வளர்ச்சி நிதி என்ற பெயரில் வசூலும் செய்வதாக தெரியவருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் பெயரையும், கரூர் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் வி.வி. செந்தில்நாதன் பெயரையும் தவறுதலாக பயன்படுத்தி வசூல் எதுவும் மேற்கொள்ளக்கூடாது.
தவறும் பட்சத்தில் தங்கள் மீது சட்டப்படியான குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை தொடங்கப்படும் என்பதை இந்த பொது அறிவிப்பின் மூலம் அறியவும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜகவில் பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபடுவதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் கரூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications