கையில் பையுடன் சுற்றிய பெண்.. போலீஸ் சோதனையில் செல்போன்கள் பறிமுதல்.. பரபரப்பு!
கரூர்: கரூர் மாநகராட்சியின் 38ஆவது வார்டில் வாக்களர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 37 செல்போன்கள், டோக்கன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்று வருகிறது.
சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சற்று தாமதமாகத் தொடங்கியது. தமிழகத்தில் சில இடங்களில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதனிடையே கரூர் மாவட்டத்தில் 38ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பெண் ஒருவர் பையுடன் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரது பையைச் சோதனை செய்தனர்.
அப்போது, அதில் இருந்த 11 செல்போன்களையும் அங்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் பெயர் பொறிக்கப்பட்ட டோக்கனையும் போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஒரு வீட்டை அடையாளம் காட்டினார்.
அங்கு போலீசார் நடத்திய சோதனையில் கரூர் மாநகராட்சியின் 38ஆவது வார்டில் வாக்களர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 37 செல்போன்கள், டோக்கன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications