பள்ளிக் குழந்தைனு கூட பார்க்கலையே! இளவரசன் செய்த இழிவான வேலை! கதிகலங்கிப் போன கருர்! போலீஸ் வேற!
கரூர்: கரூரில் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காவல்துறையில் பணியாற்றும் இளவரசன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றங்களை தடுக்க வேண்டிய காவலரே குற்றவாளியாகியிருப்பது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பள்ளியில் படிக்கும் சிறுமிகளை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் அதிர்ச்சி தகவலும் பெற்றோர்களை பரபரக்க வைத்துள்ளது. இந்த நிலையில் குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையினரும் சில நேரங்களில் இது போன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடுவது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் கரூரில் நடந்துள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் இளவரசன். 41 வயதான இவர் வங்கபாளையத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் தனது வீட்டின் அருகே வசிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்திருக்கிறது.

அந்த சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் நாளுக்கு நாள் இளவரசனின் இம்சைகள் அதிகமாக இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் பெற்றோர் கூலி வேலைக்குச் செல்லும் நிலையில் அவர்கள் இல்லாத நிலையில் வீட்டுக்குள் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு இதுகுறித்து வெளியே தெரிவித்தால் பெற்றோரை கைது செய்து சிறையில் தள்ளி விடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இதற்கு பயந்து தான் அந்த சிறுமி சொல்லாமல் இருந்திருக்கிறார். ஆனால் நாளுக்கு நாள் இளவரசனின் தொல்லை அதிகமாகவே வேறு வழியின்றி தனது தாயிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் தகவல் அளிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளவரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றங்களை தடுக்க வேண்டிய காவல் அதிகாரியே குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications