சர்ச்சையான ஏஆர் ரஹ்மான்.. ‛மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் பங்கேற்காதவருக்கு ரூ.67,000 வழங்க உத்தரவு
கரூர்: கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் ‛மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. இந்நிலையில் தான் நிகழ்ச்சியில் பங்கேற்காத நபருக்கு டிக்கெட் கட்டணத்தை விட சுமார் 6 மடங்கு பணத்தை வழங்க கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் முன்னணி திரைப்பட இசையமைப்பாளராக இருப்பவர் ஏஆர் ரஹ்மான். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா உள்பட வெளிநாடுகளில் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் ஏஆர்ரஹ்மானின் ‛மறக்குமா நெஞ்சம்’ கான்சர்ட் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தனர்.
ஆனால் திட்டமிட்டப்படி அக்டோபர் மாதம் 12ம் தேதி நிகழ்ச்சி நடைபெறவில்லை. அன்றைய தினம் கனமழை பெய்ததால் நிகழ்ச்சி இன்னொரு நாளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. டிக்கெட்டுகளின் கட்டணத்துக்கு ஏற்பட இருக்கைகள் போடப்படவில்லை. இதனால் பலரும் இருக்கைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
அதோடு ஏராளமானவர்கள் நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பினர். மேலும் அந்த இடத்தில் கடும் போக்குவர்தது நெரிசல் ஏற்பட்டதோடு, முதல்வர் ஸ்டாலினின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரினர்.
இந்நிலையில் தான் கரூர் திருப்பதி லே-அவுட்டில் வசித்து வரும் அஸ்வின் மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்துடன் ஏஆர் ரஹ்மானின் ‛மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியை பார்க்க டிக்கெட் எடுத்தார். அவர் ரூ.12 ஆயிரம் டிக்கெட்டுக்காக செலவு செய்தார். ஆனால் அக்டோபர் 12ம் தேதி நடக்க வேண்டிய நிகழ்ச்சி மாற்றப்பட்டதால் அஸ்வின் மணிகண்டன், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.
நிகழ்ச்சி மாற்றப்பட்டுள்ளதால் இனி என்னால் பங்கேற்க முடியாது. இதனால் டிக்கெட் கட்டணத்தை திரும்ப தரும்படி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமும் டிக்கெட் கட்டணத்தை திரும்ப அளிப்பதாக கூறியது. ஆனால் கடைசி வரை கட்டணம் திருப்பி வழங்கப்பவில்லை. இதையடுத்து அஸ்வின் மணிகண்டன் சார்பில் கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. அதாவது டிக்கெட் தொகையுடன் சேர்த்து அஸ்வின் மணிகண்டனுக்கு ரூ.67 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ஏசிடிசிக்கு உத்தரவிட்டது. இதில் டிக்கெட் தொகை ரூ.12 ஆயிரம், இழப்பீடு ரூ.50 ஆயிரம், செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.67 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications