பதற்றம், மயக்கம், அழுகுரல்! கொத்து கொத்தாக விழுந்த மக்கள்! துயரத்திற்கு நடுவே பேசி கொண்டிருந்த விஜய்
கரூர்: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு விஜய் மாநிலம் முழுக்க ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அதன்படி இன்று கரூரில் பிரச்சாரம் நடந்த நிலையில், மிகப் பெரிய அசம்பாவிதம் நடந்துவிட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கிடையே விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, அசம்பாவிதம் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தவெக தலைவர் விஜய் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்கிறார். விஜய்யை பார்க்க அதிகளவில் கூட்டம் திரள்வதால் பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் போலீசார் அனுமதி கொடுத்து வருகிறார்கள். இதுவரை எந்தவொரு பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் தான் போய்க் கொண்டு இருந்தது.

விஜய் கருர் பிரச்சாரம்
ஆனால், இன்று கரூர் பிரச்சாரத்தில் எல்லாமே மொத்தமாக மாறிவிட்டது. மிகப் பெரிய ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. விஜய் பிரச்சாரத்தைப் பார்க்கப் பலர் திரண்டிருந்த நிலையில், அப்போது திடீரெனக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்துக் கொண்டு செல்ல நிலையில், அசம்பாவிதம் நடந்துள்ளது. வரிசையாகப் பலர் மயங்கி விழுந்துள்ளனர்
அதிகரிக்கும் உயிரிழப்புகள்
இதுவரை 35+க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நிலைமையை சமாளிக்க அண்டை மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் கரூருக்கு விரைந்துள்ளனர்.
இதற்கிடையே விஜய் பேசிக் கொண்டு இருக்கும்போதே அசம்பாவிதம் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. தாமதமாக விஜய் வந்த நிலையில், அவர் பேச ஆரம்பிக்கும்போதே கூட்டம் அளவு கடந்து போய் விட்டது. விஜய் வழக்கம் போல வந்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அவரை கேட்க மக்கள் ஆர்வமாகத் திரண்டனர். அப்போது தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.
பேசும்போதே தள்ளுமுள்ளு
ஒரு பக்கம் பொதுமக்கள் மயங்கி விழுந்து கொண்டிருக்க விஜய், அதற்கு நடுவே பேசிக் கொண்டிருந்துள்ளார். விஜய்க்கு கூட்டம் அதிகம் எனத் தெரிந்தாலும் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கிறது என்பது தெரியவில்லை. இதன் காரணமாகவே அவர் வழக்கம் போலப் பேசிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். ஆனால், விஜய் பேசும்போதே தள்ளுமுள்ளு ஆரம்பித்துவிட்டது.

இன்று விஜய் பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருந்தபோதே, அங்கு மக்கள் அலறிக்கொண்டு இருக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது. இது அங்கு எந்தளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது என்பதையே காட்டுவதாக இருக்கிறது. கரூர் பிரச்சாரத்தில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாகப் பரவும் வீடியோ பார்க்கவே கண்ணீரை வரவழைப்பதாக இருக்கிறது. கூட்ட நெரிசலைத் தாங்காமல் மக்கள் மயங்கி விழுகிறார்கள். அங்கு மிகப் பெரிய குழப்பமே இருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பி வருகிறது.
சிறுவர்களும் உயிரிழப்பு
கரூரில் விஜய்யின் பிரச்சாரத்தைப் பார்க்கச் சிறுவர்கள், குழந்தைகளும் அதிகளவில் திரண்டுள்ளனர். இதுவே குழந்தைகளும் உயிரிழக்கக் காரணமாக இருக்கிறது. ஒரு பக்கம் கரூர் அரசு மருத்துவமனையில் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோக தனியார் மருத்துவமனைகளிலும் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரூர் முழுக்கவே ஒரு குழப்பமான சூழல் இருக்கிறது.












Click it and Unblock the Notifications