கரூரில் சீமான் தங்கிய ஹோட்டல் முன் போலீஸ் குவிப்பு.. ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் திரண்டதால் பரபர!
கரூர்: கரூர் அருகே வெண்ணெய்மலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து மக்கள் போராடி வரும் நிலையில், நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். முன்னதாக, சீமான் கரூரில் தங்கி இருந்த ஹோட்டலை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அருகே உள்ள காதப்பாறை ஊராட்சி வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் காதப்பாறை ஊராட்சி வெண்ணெய்மலை, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி சின்னவடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அரசு எடுத்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெண்ணெய்மலை பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தடுத்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வருவாய்த் துறை துணையுடன் போலீஸார் பாதுகாப்புடன் வெண்ணெய்மலை, சின்னவடுகப்பட்டி பகுதிகளில் உள்ள சுமார் 20 காலி இடங்களில், அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர்.
பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு என்று கூறி தமிழக அரசு அகற்றி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டார்.
இதற்காக கரூர் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். அங்கு தற்போது போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சீமான், ஹோட்டலில் இருந்து வெண்ணெய்மலை செல்வதை தடுப்பதற்காகவே ஹோட்டலை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்த தகவலை அறிந்து, அங்கு ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஹோட்டலில் இருந்து புறப்பட்ட சீமான், வெண்ணெய்மலை சென்று அங்கு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து, ஆக்கிரமிப்பு அகற்றத்தைக் கண்டித்து உரையாற்றியுள்ளார். மக்களுக்குப் போகத்தான் கடவுளுக்கு, எந்தக் கடவுளும் எனக்கு 500 ஏக்கர் நிலம் கொடு என்று கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் சீமான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications