கடைசியா சாந்தி முகத்தை பார்க்கணும்.. இளைஞர் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. வெலவெலத்து போன போலீஸ்
பெண் டாக்டர் இறந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது
கரூர்: சாந்தியின் முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் என்பதற்காக, இளைஞர் ஒருவர் மேற்கொண்ட ஐடியாவால், கரூர் மாவட்ட காவல்துறையே வெலவெலத்து போய்விட்டது!
கரூரை சேர்ந்தவர் மலர்சாந்தி.. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மைய மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருபவர்.
மலர்சாந்திக்கு 48 வயதாகிறது.. கணவர் பெயர் செல்வம்.. ஆனால் கணவனை பிரிந்துவிட்டார்.. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 வருடமாகவே தனித்து வாழ்ந்து வருகிறார்.. விவாகரத்தும் பெற்றுவிட்டார்.

பரிதாப பலி
இந்நிலையில், எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர், சிவானந்தம் தோட்டத்திற்கு, சாந்தி சென்றுள்ளார்... அப்போது, அங்குள்ள கிணற்றில் முகத்தினை கழுவும்போது, தவறி கிணற்றில் விழுந்துள்ளார். சாந்திக்கு நீச்சல் தெரியாமல் நீருக்குள்ளேயே மூழ்கி இறந்துவிட்டார்.. இதையடுத்து இந்த தகவல் மாயனூர் போலீஸாருக்கு தெரிவிக்கப்படவும், அவர்களும் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து, மலர்சாந்தியின் சடலத்தை கைப்பற்றினர்..

மயானம்
கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேதத்தினை, கரூர் அடுத்துள்ள பாலம்மாள்புரம் எரியூட்டு மயானத்திற்கு கொண்டு சென்றனர்.. அங்கு சடலத்தை எரியூட்ட ஏற்பாடுகள் தயாராகி கொண்டிருந்தது.. அப்போது கரூர் மாவட்ட எஸ்பி ஆபீசுக்கு திடீரென ஒரு இளைஞர் வந்தார்.. சாந்தியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால், சடலத்தை எரியூட்டக் கூடாது என்றார்.

போலீஸ்
இதனால் அதிர்ச்சியுற்ற வெங்கமேடு போலீஸார், பலம்மாள்புரம் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று, சடலத்தை எரிப்பதை தடுத்து நிறுத்தினர்.. மேலும், சாந்தியின் மரணம் தொடர்பான விசாரணையை அந்த சுடுகாட்டிலேயே ஆரம்பித்தனர்.. முதல்விசாரணையே அந்த இளைஞர்தான்.. அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி கேள்வியை கேட்டபோது, இளைஞர் திருதிருவென விழித்தார்.. பிறகுதான் தெரிந்தது அந்த இளைஞர் பொய் சொல்லி உள்ளார்..

இளைஞர்
காரணம், சாந்தியின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான், இப்படி ஒரு பொய்யை சொன்னாராம்.. அப்படி சொன்னால்தான், சடலத்தை எரியூட்டாமல் கொஞ்ச நேரம் வைத்திருப்பார்கள் என்பதால் பொய் தகவலை தெரிவித்ததாக போலீசில் தெரிவித்தார்.. இதை கேட்டு மாயனூர், வெங்கமேடு போலீசார் மட்டுமல்ல, கரூர் மாவட்ட காவல்துறையினரையே அதிர்ந்து போய்விட்டது.. கிட்டத்தட்ட 3 மணி நேரம் போலீசாரை குழப்பி அடித்துள்ளார் அந்த இளைஞர்.

பரபரப்பு
தந்தை மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இறந்த மலர்சாந்தி உடலை எரியூட்டும் மேடையில் தகனம் செய்தனர்.. ஆனால் அந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை.. கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்த சாந்தி எப்படி இருப்பார் என்பதை பார்ப்பதற்காகவே இப்படி ஒரு டெக்னிக்கை கையாண்டது கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications