வந்தது அமைச்சர்னு தெரியாமல் அலட்சியமாக பதிலளித்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்! அடுத்து நடந்த ட்விஸ்ட்
கரூர்: கரூர் அருகே நேற்று இரவு திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை அடையாளம் கண்டு கொள்ளாத டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும், அமைச்சர் கேட்ட கேள்விக்கு அலட்சியமாக பதில் கொடுத்தனர். இதையடுத்து, அமைச்சர் சிவசங்கர் தான் என்று கூறியதும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த டிரைவரும் கண்டக்டரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் முறையாக இயக்கப்படுகிறதா என களத்திற்கே சென்று ஆய்வு செய்வதை பார்க்க முடியும்.

வந்தது அமைச்சர் என தெரியாமல்
இந்த நிலையில்தான் நேற்று இரவு கோவை அருகே அரசு பேருந்து ஒன்று உரிய இடத்தில் நிறுத்தப்படாமல் இருந்ததை பார்த்த அமைச்சர் சிவசங்கர் டிரைவர் மற்றும் நடத்துநரிடம் இது பற்றி கேட்டுள்ளார். வந்து இருப்பது போக்குவரத்து அமைச்சர் என தெரியாமல் டிரைவரும் கண்டக்டரும் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளனர். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
டீ குடித்த அமைச்சர் சிவசங்கர்
கோவையில் கொடீசியா வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு தனது காரில் அரியலூர் நோக்கி சென்றுள்ளார். செல்லும் வழியில் கரூர் - மாயனூர் இடையே ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி அமைச்சர் சிவசங்கர் டீ குடித்துள்ளார்.
அப்போது, அந்த உணவகத்தில் அரசு பேருந்து ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் பயோ பிரேக் மற்றும் உணவு அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்தின் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். இதைப்பார்த்த அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
உங்க வேலையை பாருங்க
உரிய இடத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள். உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது என்று கேட்டு இருக்கிறார்.
சிவசங்கர் வழக்கமாக அணியும் வெள்ளை சட்டை, வேஷ்டி என இல்லாமல் பேண்ட், சர்ட்டுடன் பயணியை போல இருந்ததால் அவரை அடையாளம் கண்டு கொள்ளாத டிரைவரும் கண்டக்டரும், நீங்க ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க என்று கேட்டுள்ளனர். உங்க வேலையை பாருங்க என்ற தொனியில் கண்டக்டரும் டிரைவரும் பதிலளிக்க, உடனே அமைச்சர் சிவசங்கர், நான் யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா ? எனக்கேட்டுள்ளார்.
நீங்க யாருன்னு தெரியவில்லையே
நீங்க யாருன்னு தெரியவில்லையே என டிரைவர், கண்டக்டர் பதிலளித்துள்ளனர். அதற்கு அமைச்சர் சிவசங்கர், நான் வேறு யாரும் இல்லை. உங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் என்று கூறியிருக்கிறார். இதனைக்கேட்டதும், அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் ஒரு நொடி வெலவெலத்து போயினர். அமைச்சரிடம் என்ன சொல்வது என தெரியாமல் விழித்தனர்.
உடனே அமைச்சர் சிவசங்கர், இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினார். டிரைவர், கண்டக்டர் இருவரும் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பதிலளித்து உள்ளனர். அமைச்சர் இரவு வேளையில் மேற்கொண்ட இந்த திடீர் ஆய்வு அரசு பேருந்து டிரைவர்கள், கண்டர்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications