கைது செய்யப்படுவாரா கமல்?.. அரவக்குறிச்சியில் 2 வழக்குகள் பதிவு

அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்

    அரவக்குறிச்சி: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கமல் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவாரோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே" என்று கமல் பேசிய இந்த வார்த்தைகளுக்குதான் அவர்மீது வழக்கு மேல் வழக்கு பாய்ந்து வருகிறது.

    அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் கமல் பேசிய பேச்சு நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே" என்று பேசியது விவாதம், சர்ச்சை, புகார் என நீண்டு வருகிறது.

    பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டி தீர்த்துவிட்டார்கள். அதேபோல, ராம்தாஸ் அத்வாலே, நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து விட்டார்கள்.

    இந்து சேனா

    இந்து சேனா

    இதைதவிர, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கமல் மீது பாஜக தரப்பில் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவும் அளித்தாயிற்று. இந்து சேனா அமைப்பும் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கேஸ் போட்டுள்ளது.

    2 வழக்குகள்

    2 வழக்குகள்

    ஆனால் கமல் எங்கு பேசினாரோ, அதே அரவக்குறிச்சியில் இப்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. பள்ளப்பட்டி பிரச்சாரத்தின்போது, கலவரத்தைத் தூண்டும் வகையில் கமல் பேசியதாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்னொரு வழக்கு

    இன்னொரு வழக்கு

    இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் இந்த புகாரை அளித்துள்ளார். இதைதவிர, பொது இடத்தில் பிரச்சினையை உருவாக்கியதாக இன்னொரு வழக்கும் போடப்பட்டுள்ளது. அதாவது 2 பிரிவுகளின் கீழ் கமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைது செய்யப்படுவாரா?

    கைது செய்யப்படுவாரா?

    நாடு முழுவதும் கண்டனங்கள், எதிர்ப்புகள், புகார்கள், வழக்குகள் என்று கமல் மேல் அவ்வப்போது பாய்ந்து வருகிறது. இது சம்பந்தமான புகார்களில் போலீசாரும் உடனடியாக வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதனால் கமல் எந்நேரமும் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+