ராகுல்காந்தியின் நம்பிக்கைக்குரியவர்! ஊழலுக்கு எதிரானவர்! யார் இந்த ஜோதிமணி?
கரூர்: கரூர் லோக்சபா தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, யார் இவர்?
கரூர் லோக்சபா தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் கரூர் லோக்சபா தொகுதியில் ஜோதிமணி (காங்கிரஸ்), கே.ஆர்.எல்.தங்கவேல் (அதிமுக), வி.வி.செந்தில்நாதன் (பாஜக), டாக்டர் ஆர்.கருப்பையா (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை ஜோதிமணி 534906 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 368090 வாக்குகளும், பாஜக வேட்பாளர் செந்தில் நாதன் 102482 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இந்த தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இரண்டாவது முறையாக கரூர் எம்பியாகும் ஜோதிமணி யார் என்பதை பார்க்கலாம். அரவக்குறிச்சியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவருடைய தந்தை விவசாயி. சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்துவிட்டார், இதனால் தனது தாயின் ஆதரவுடன் படித்து வளர்ந்த இவர் உடுமலைபேட்டையில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்தார்.
கல்லூரி காலங்களில் இவர் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்ப்பட்டார். அது போல் என்எஸ்எஸ் முகாம்களிலும் கலந்து கொண்டு சமூக சேவை ஆற்றினார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் டிகிரி படித்துள்ளார். தனது 22 வயதில் அரசியலில் நுழைந்தார் ஜோதிமணி. இவர் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு கொந்தளித்துவிடுவார். நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமைகளுக்காக போராடியுள்ளார். இந்த நிலையில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்றே கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் போர்க் கொடி உயர்த்தினர். ஆயினும் டெல்லியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அவருக்கு இந்தத் தேர்தலில் சீட் கிடைத்துவிட்டது.
மேலும் திமுகவின் செல்வாக்கும் அவருக்கு இருக்கிறது. கடந்த தேர்தலில் அதிமுகவின் தம்பிதுரைக்கு எதிராக எப்படி அதிருப்தி நிலவியதோ அது போல் ஜோதிமணிக்கும் இந்த முறை நிலவுகிறது. எனவே ஜோதிமணிக்கு இந்த முறை அத்தனை எளிதில் வெற்றி கிட்டாது என்றார்கள். ஆனால் 534906 வாக்குகளை பெற்று ஜோதிமணி வென்றார்.
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications