நாலரை வருஷமா ஏன் வரல மேடம்? இப்ப எதுக்கு வந்திருக்கீங்க! கரூர் எம்.பி.ஜோதிமணியை அலற விட்ட வாக்காளர்!
கரூர்: கடந்த நான்கரை ஆண்டுகளாக தங்கள் பகுதியை எட்டிக்கூட பார்க்காமல் இருந்துவிட்டு, இப்ப மட்டும் எதற்கு வந்திருக்கிறீர்கள் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் வாக்காளர் ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் ஓட்டுக்காக இப்போது ஊருக்கு வந்திருக்கீங்க, அப்படித்தானே என வினவி ஜோதிமணி எம்.பி.யை அலறவிட்டார் அந்த வாக்காளர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி எம்.பி. கடந்த 2019 முதல் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகின்றன.
இந்த 6 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்றால் மாதத்தின் பாதி நாட்கள் ஜோதிமணி எம்.பி.யால் வேறு எந்த பணியும் செய்ய முடியாது. பாரத் ஜோடோ யாத்ரா உள்ளிட்ட கட்சிப் பணிகளில் பிசியாக இருக்கும் அவர் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் டெல்லியிலேயே தங்க வேண்டிய சூழல் உள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்கு சுற்றுப்பயணம் சென்ற ஜோதிமணிக்கு அங்கு அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. கிராம மக்களை சந்தித்துவிட்டு புறப்படவிருந்த ஜோதிமணியிடம், வாக்காளர் ஒருவர் நாலரை வருஷமா ஏன் நீங்க எங்க ஊருக்கு வரல. நன்றி சொல்லக் கூட வராத நீங்க இப்ப எதுக்கு வர்ரீங்க என கேள்வி எழுப்பினார்.
இதனால் டென்ஷனான ஜோதிமணி எம்.பி. 6,000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தாம் நன்றி சொல்ல சென்றிருப்பதாகவும் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருக்கும் உங்களுக்கு பதிலளிக்க முடியாது எனவும் கூறிவிட்டு நடையை கட்டினார். இருப்பினும் அந்த வாக்காளர் விடுவதாக இல்லை, தேர்தல் வரவுள்ளதால் ஓட்டுக்காக இப்ப மட்டும் நாங்கள் தெரிகிறோமா எனக் கேட்க அந்த இடம் மேலும் பரபரப்பானது.
இதையடுத்து காவல்துறையினர் சமாதானப்படுத்தி கேள்வி எழுப்பிய நபரையும், காங்கிரஸ் கட்சியினரையும் அனுப்பி வைத்தனர். மக்கள் மிகவும் விழிப்புணர்வாக இருப்பதால் பல தொகுதிகளிலும் சிட்டிங் எம்.பி.க்களின் நிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications