சொல்லியும் கேட்கல.. நேரிலேயே பார்த்துட்டேன்.. அதான் காரிலேயே வெச்சு எரிச்சிட்டோம்.. அலற வைத்த கொலை

கரூரில் தொழிலபதிரை மனைவி, மகன் எரித்து கொன்றுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கள்ள காதல் உறவு... தந்தையை எரித்து கொன்ற மகன்

    கரூர்: "எத்தனை முறை சொன்னாலும் கேக்கல.. கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதை நேர்லயே பார்த்தாச்சு.. அதான் கழுத்தை நெரித்து.. கொன்று தீ வைத்து எரிச்சிட்டோம்" என்று தொழிலதிபரின் மனைவி, மகன் போலீசில் தெரிவித்துள்ளனர்.

    கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே குப்பம்-வேலம்பாளையம் ரோட்டில் நேற்று விடிகாலை ஒரு கார் எரிந்த நிலையில் காணப்பட்டது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொன்னார்கள்.

    விரைந்து வந்த போலீசாரும் காரை பார்வையிட்டனர். அப்போது காரின் பின்சீட்டில் ஒரு ஆண் எரிந்த நிலையில் கருகி கிடந்தார். அவர் யார் என்ற அடையாளமும் தெரியவில்லை. ஆனால் கொலை செய்திருக்கிறார்கள் என்று மட்டும் போலீசாருக்கு தெரிந்தது.

    ஆய்வுகள்

    ஆய்வுகள்

    இதையடுத்து, மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் இந்த விவகாரத்தை நேரடியாக கையில் எடுத்தார். மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் என்று அடுத்தடுத்த ஆய்வுகள் ஆரம்பமாயின. காரின் நம்பரை வைத்து விசாரணை ஆரம்பமானது.

    தொழிலதிபர்

    தொழிலதிபர்

    நொய்யல் குறுக்கு சாலையை சேர்ந்த ரெங்கசாமி, வயசு 51, ரியல் எஸ்டேட் வேலை பார்ப்பவர், பழைய லாரிகளை வாங்கி புதுப்பித்து விற்பது, பாக்குமரத்தட்டு தயாரித்து விற்பது, போன்ற பல வேலைகளை செய்து வருபவர்தான் கொலையுண்டவர் என்ற விவரங்கள் தெரியவந்தது. இதற்கு பிறகு போலீசார் ரெங்கசாமி வீட்டுக்கு போனார்கள். வீட்டில் கவிதா, மகன் அஸ்வின்குமார் இருந்தனர். கவிதாவுக்கு 41 வயதாகிறது, மகனுக்கு 19 வயதாகிறது. இதைபற்றி கேட்டதற்கு ஆளுக்கு ஒன்றாக உளறினார்கள். பிறகுதான், விஷயம் வெளிப்பட்டது.

    கள்ளக்காதல்

    கள்ளக்காதல்

    இது ஒரு கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட கொலை என்று தெரிந்தது. ரெங்கசாமிக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், அவரை பலமுறை கவிதா எச்சரித்துள்ளார். ஆனால், உறவை துண்டிக்கவில்லை என்பதால், கணவனை வீட்டிலேயே வைத்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் கவிதா... மகனுடன் சேர்ந்து கணவன் உடலை காரில் எடுத்து சென்று எரித்து கொன்றும் உள்ளார்.

    அஸ்வின்குமார்

    அஸ்வின்குமார்

    இதைபற்றி மகன் அஸ்வின்குமார் தனது வாக்குமூலத்தில் சொல்லும்போது,"நான் கரூரில் ஒரு தனியார் காலேஜில் பொறியியல் 2-ம் வருஷம் படிக்கிறேன். என் அப்பாவுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அதனால் என் அம்மாவுடன் அடிக்கடி சண்டை, தகராறு வரும். போன 4-ந்தேதி வீட்டு பக்கத்திலேயே அந்த கள்ளக்காதலியுடன் என் அப்பா உல்லாசமாக இருந்தார். அதை நான் பார்த்துட்டேன். என் அம்மா கிட்ட சொன்னேன்.. அவர் அழுதார்.

    கழுத்தை நெரித்தேன்

    கழுத்தை நெரித்தேன்

    முந்தாநாள் என் அப்பா ஃபுல்லா தண்ணி அடிச்சிட்டு வீட்டுக்கு வந்தார்.அப்போ என் அம்மா கள்ள உறவு பத்தி அப்பாகிட்ட கேட்டாங்க.. அதுக்கு அம்மாவை கண்மூடித்தனமா அடிச்சிட்டார். "உனக்கு இஷ்டம் இருந்தா இந்த வீட்ல இரு.. இல்லேன்னா உன் மகனை கூட்டிட்டு போயிடு"ன்னு சொன்னார். அதனாலதான் எனக்கு கோபம் அதிகமாகி, என் அப்பா கழுத்தை நெரிச்சோம்.. என் அம்மாவும் நானும், அவர் சடலத்தை ஒரு போர்வையில் சுற்றி காரில் போட்டு குப்பம்-வேலம்பாளையம் சாலையில் சென்றோம்.

    எரித்துவிட்டோம்

    எரித்துவிட்டோம்

    ஆனால் கார்திடீர்னு பள்ளத்தில சிக்கிடுச்சு. நகரவே இல்லை.. அதனால், போலீசில் மாட்டிக்குவோமோ என்ற பயம் வந்துவிட்டது. உடனே, காரில் இருந்த டீசலை எடுத்து, அப்பா மேல ஊற்றி தீவைத்து எரிச்சிட்டோம். அப்புறம் அங்கிருந்து நடந்தே வீட்டுக்கு நாங்கள் வந்துவிட்டோம்" என்றார். இதையடுத்து, கவிதா, அஸ்வின்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற மகன் உதவியோடு மனைவியே காரில் வைத்து கணவனை எரித்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+