அடுத்த மாதம் திருமணம்.. கரூர் கூட்டத்தில் உயிரிழந்த இளம் ஜோடி.. கதறும் உறவினர்கள்
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கரூர் மாவட்டம் முழுவதுமே மரண ஓலங்களால் கலங்கடிக்க செய்துள்ளது. இந்த சம்பவத்தில் 10 குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் அடுத்த மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த இளம் ஜோடி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் உறவினர்களை மிகுந்த வேதனையில் தள்ளியுள்ளது.
கரூர் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என்று பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவத்தை நினைத்த மொத்த நாடும் கண்ணீரில் மூழ்கியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு, குழந்தைகளை இழந்த உறவுகள், உறவுகளை இழந்த குழந்தைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் சோக சம்பவங்களால் நிறைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த இளம் ஜோடி தவெக கூட்டத்தில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த இளம் பெண்ணின் அம்மா, "என் மகள் கோகுலஶ்ரீ. மருமகன் ஆகாஷ். இருவருக்கும் 24 வயது தான் ஆகிறது. அடுத்த மாதம் அவர்களுக்கு திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று மதியம் 2 மணியளவில் என்னிடம் பேசிவிட்டு தான் அவர்கள் சென்றார்கள். கரூர் என்பதால் தான் விட்டேன். இல்லையென்றால் விட்டிருக்க மாட்டேன். தெரிந்தவர்களின் வீட்டு மாடியில் நிற்கிறோம் என்றனர். கீழே இறங்கி வரும்போது தான் ஆகியுள்ளது.
அவர்களை மிதித்தே கொன்றுவிட்டனர். 6.30 மணிக்கு பேசியபோது கும்பலாக இருக்கிறது, வந்துவிடுங்கள் என்று கூறினேன். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். வந்துவிடுவோம் என்றனர். செல்ஃபி எல்லாம் எடுத்து போட்டனர். என் மகனும் அவர்களுடன் சென்றிருந்தனர். மகன் தப்பித்துவிட்டான். மகள், மருமகன் இருவரும் உயிரிழந்துவிட்டனர். ஆசை ஆசையா பார்த்து பார்த்து வளர்த்து இப்படி ஆகிவிட்டதே.
கொன்றுவிட்டார்கள். கடைசியாக தவெக கட்சி துண்டுடன் அவர்கள் போட்டோ எடுத்து அனுப்பியிருந்தனர். இருவரும் பொண்ணு, மாப்பிள்ளை போல சென்று இப்படி கருமாதி ஆகிவிட்டதே. என் மகளை பொத்தி பொத்தி வளர்த்தேன். கல்லூரியில் பேராசிரியராக இருந்தவள் இப்படி இறந்துவிட்டாளே. என் மகள் சிங்கம் போல இருப்பாள். கடைசி 3 நாட்களாக தூங்காமல் போறேன்.. போறேன் என்று சொல்லி இப்படி போய்விட்டாளே.
வண்டி ஏறும்போது கூட போக வேண்டாம் என்று நான் கெஞ்சினேன். நாங்கள் மாடியில் தான் நிற்போம், சாலையில் நிற்க மாட்டோம் என்று சொல்லியதை நம்பி ஏமாந்து அனுப்பிவிட்டேன். ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து எல்லாம் செய்து, கடைசியில் வாழாமலேயே சென்றுவிட்டார்களே. எங்கள் குடும்பம் வீதியில் நிற்கிறது. சாவதற்காக தான் அங்கு போனார்களா. கடவுளுக்கு கூட கண் தெரியவில்லையா." என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications