கிளாம்பாக்கம் கிளம்பிட்டீங்களா? பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி ரூட் புது தகவல்.. சென்னைவாசிகள் ஹேப்பி
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சென்னைவாசிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணமாகி வரும் நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
வழக்கமாக சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும். அதுவும் இப்போது பண்டிகை காலம் என்பதால், போக்குவரத்து சற்று அதிகரித்தபடியே வருகிறது.

தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில், பலரும் சொந்த ஊர் செல்ல முயன்றுகொண்டிருக்கிறார்கள். அதனால்தான், போக்குவரத்து துறையும், காவல்துறையும் பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், வசதிகளையும் செய்து தந்து வருகிறார்கள்.
காவல்துறை: நேற்றுகூட, காவல்துறை சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியானது. அதில், தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறையால் ஜிஎஸ்டி சாலை-சரவணா ஸ்டோர்ஸ் சந்திப்பு மற்றும் ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் நகராட்சி சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, நேற்று முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல, 2 நாட்களுக்கு முன்பு, ஆம்னி பஸ்கள் தரப்பிலிருந்தும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.. அதாவது, "சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் அனைத்து ஆம்னி பஸ்களும், நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் காவல்துறை உத்தரவின் பேரில் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் வந்தடையும்.
பெருங்களத்தூர்: இந்த தேதிகளில் நகரத்தின் உட் பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவு படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டது என்றும், எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லமாம். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் கிழக்கு ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல் இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டணம் விவரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து சம்மந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்" என்று அனைத்து ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்திருந்தது.
கிளாம்பாக்கம்: இந்நிலையில், தென்மாவட்டங்களுக்கு செல்ல பேருந்து முன்பதிவு செய்த பயணிகளை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து
நிலையத்தில் இருந்து ஏற்றிச்செல்வதற்கு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக, மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதுகுறித்து தாம்பரம், பெருங்களத்துார், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய அரசு விரைவு போக்குவரத்து கழக உதவி மேலாளர் முனியராஜ் சொன்னதாவது:
சென்னையில் இருந்து மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற வேண்டும் என்பது இல்லை. பெருங்களத்துார், தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் பேருந்து ஏறி செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
முன்பதிவு: திருப்போரூர், மாமல்லபுரம், கேளம்பாக்கம், மண்ணிவாக்கம், வண்டலுார், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், கண்டிகை, பெருமாட்டுநல்லுார் பகுதிகளை சேர்ந்தவர்களும், கிளாம்பாக்கம் புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, முன்பதிவு செய்துள்ள பஸ்ஸில் செல்லலாம். கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், பயணிகளுக்காகவே மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பிடம் மற்றும் பாதுகாப்பு வசதி போன்றவை செய்யப்பட்டிருக்கின்றன.
பேருந்துகள் காலை 10:00 முதல், இரவு 11:30 மணி வரை வந்து பயணியரை ஏற்றிச் செல்லும். முன்பதிவு செய்யாமல் வரும் பயணியர், பேருந்தில் இருக்கைகள் காலியாக இருந்தால், அதில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்..
அவர்கள் நிலைய மேலாளரை அணுகினால், இதற்கான உதவிகளை செய்வார்.. 24 மணி நேரமும் கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்" என்றார். இந்த அறிவிப்பானது, பயணிகளுக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications