கிருஷ்ணகிரி கோயில்களில் 199 கோடி மதிப்பிலான கற்கள் திருட்டு.. சேலம் டிஜஜி நேரில் ஆஜராக உத்தரவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கோவில்களில் 199 கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலம் சரக டிஜஜி வரும் ஜூலை 26-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தையா சுவாமி கோவில், பட்டாலம்மன் கோவில்,பெரியமலை பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், கோதண்டராமசாமி கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

இந்த சொத்துக்களை சிலர் அரசு அதிகாரிகளுடன் இணைந்து சட்டவிரோதமாக குவாரிகள் நடத்தி கோவில் நிலத்தில் இருந்த கற்களை விற்று வருவதாக சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் கோவில் நிலங்களின் ஆவணங்களை திருத்தி சட்டவிரோத குவாரிகள் நடத்தி 200கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கோவில் நிலங்களில் சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வரும் குவாரிகளை அப்புறப்படுத்தவும், கோவில் நில ஆவணங்களை திருத்த உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என ராதாகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து அறநிலைய துறையின் துணை ஆணையர், கோவில் நிலம் மீட்பு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் தேன்கனிக்கோட்டை ஹனுமந்தைய கோவிலில் 28 கோடி 51 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கற்களும், கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாலம்மன் கோவிலில் 170 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான கற்களும் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் சில அதிகாரமிக்க நபர்கள் இந்த கோவில்களுக்குள் செல்ல அறநிலைய துறை அதிகாரிகளை விடுவதில்லை என்றும் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்த நீதிபதி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரிகள் நடத்துபவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள், நிலுவை வழக்குகள் குறித்த வழக்குகள் அதில் எடுத்த நடவடிக்கை குறித்த விவரங்களை வரும் ஜூலை 26ம் தேதி காலை 10.30 மணிக்கு சேலம் சரக டிஐஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications